.

Pages

Monday, February 29, 2016

அதிரை ஜாவியா நிர்வாகத்திடம் ஜெனரேட்டர், 5 சீலிங் ஃபேன் அன்பளிப்பு !

அதிரை ஜாவியாவில் பல ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் புஹாரி ஷரீஃப் மஜ்லிஸ் மிகவும் பிரசித்தம் பெற்றது. வருடந்திரும் தொடர்ந்து 40 நாட்கள் நடத்தப்படும். இதில் பல்வேறு பகுதிகளிலிருந்து பலர் வருகை தந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பிப்பார்கள்.

ஊரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஜாவியாவில் தினமும் தொழுகை மற்றும் திக்ரூ மஜ்லீஸ் நடத்தப்பட்டு வருகிறது. இதில் 30 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் அமீரக கீழத்தெரு ஜமாத் தலைவரும், சமூக ஆர்வலருமாகிய எம். அப்துல் ஜலீல் அவர்களின் தீவிர முயற்சியின் கீழ் 2800 வாட்ஸ் ஹோண்டா நிறுவன ஜெனரேட்டர் ஒன்று,  சீலிங் ஃபேன் 5 ஆகியன கீழத்தெரு ஜமாத் நிர்வாகிகள் எம். சேக்தாவூது, என்.எம்.எஸ் மன்சூர் ஆகியோர் முன்னிலையில், அதிரை அஜ்ஜாவியத்துல் ஷாதுலியா ட்ரஸ்ட் நிர்வாகச் செயலாளர் M.B. அபூபக்கர், பொருளாளர் சேக் அலி, நிர்வாக உறுப்பினர் எஸ்.ஏ அப்துல் ஹமீது ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

உதவி வழங்கிய எம். அப்துல் ஜலீல் அவர்களுக்கு அஜ்ஜாவியத்துல் ஷாதுலியா ட்ரஸ்ட் நிர்வாகத்தின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
 

5 comments:

  1. அப்துல் ஜலீல் அவர்களின் முயற்சிக்கும், உதவியவர்களுக்கும் அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக!

    ReplyDelete
  2. எடிட்டரின் கவனத்திற்கு!
    அந்த குனியிற மாதிரி உள்ள போட்டவை தூக்கினால் நல்லது. (வேற கட்சி ஞாபகம் வருது)

    ReplyDelete

  3. எடிட்டரின் கவனத்திற்கு!
    அந்த குனியிற மாதிரி உள்ள போட்டவை தூக்கினால் நல்லது. (வேற கட்சி ஞாபகம் வருது)

    ReplyDelete
  4. Masha Allah , Allah will give him firthous in ahir

    ReplyDelete
  5. மாசா அல்லாஹ் இது போன்ற உதவி செய்பசெய்பவர்கள் ஊருக்கு தேவை

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.