தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகத்திலும்,
இ சேவை மையம் மூலம் இணைய வழி பட்டா மாறுதல் திட்டத்தின் கீழ்
விண்ணப்பித்து பயன் பெறலாம்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இணைய வழி பட்டா மாறுதல் திட்டத்தின் கீழ் 16 பயனாளிகளுக்கு பட்டா மாறுதலுக்கான ஆணைகளை வழங்கி, தஞ்சாவூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் விதம் குறித்து செய்தியாளர்களிடம் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் தெரிவித்ததாவது:
தமிழக அரசின் உத்திரவுப்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களிலும் தமிழ் நிலம் மென்பொருள் இணையவழி பட்டா மாறுதல் திட்டம் கீழ்க்கண்டவாறு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
திருவையாறு வட்டம், திருவிடைமருதூர் வட்டம், பேராவூரணி வட்டம், பூதலூர் வட்டம், கும்பகோணம் வட்டம், ஒரத்தநாடு வட்டம், பட்டுக்கோட்டை வட்டம், தஞ்சாவூர் வட்டம், பாபநாசம் வட்டம் ஆகிய வட்டங்களில் இணைய வழி பட்டா மாறுதல் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மொத்த வருவாய் கிராமங்கள் 754 (906 குக்கிராமங்களிலும்) நஞ்சை, புஞ்சை இனங்களுக்கு மட்டும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் மனு செய்து பட்டா தனிப்பட்டா, கூட்டுப்பட்டா, உட்பிரிவு செய்து பட்டா மாறுதல் ஆகிய இனங்கள் தொடர்பாக மனு செய்து கொள்ளலாம். ஒரு மனுவிற்கு ரூ.50 வீதம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் செலுத்தப்பட வேண்டும். வட்டாட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் ‘இ’ சேவை மையத்திலும் மனு செய்து கொள்ளலாம்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் உள்ள விவசாய பெருங்குடி மக்கள் தங்கள் இல்லத்திற்கு அருகில் தொடக்க வேளாண்மை வங்கியில் மனு செய்து செய்து பயன் பெற கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இந்நிகழ்ச்சியில் நிலவை அளவை உதவி இயக்குநர் திரு.குழந்தைவேல், தேசிய தகவலியல் மைய தொழில் நுட்ப அலுவலர் ஸ்டான்லி வில்லியம்ஸ், வட்டாட்சியர்கள் பா.சுரேஷ், சங்கர், முருகவேல், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரெ.மதியழகன் மற்றும் செய்தியாளர்கள் உடன் இருந்தனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.