இதனைக் கண்ட யாசர் அரபாத் அதிர்ச்சி அடைந்து உரியவரிடம் சேர்க்க முயற்சித்து வீடு திரும்பினார். பின்னர் விட்டுசென்ற தொழிலாளி பணிப்புரியும் துபாயில் உள்ள கம்பெனிக்கு அவரது நண்பர் நவாஸ்கானை அனுப்பி வைத்து அவர் மூலம் தொடர்புக்கொண்டு விட்டு சென்றவரின் செல்நம்பர் பெற்றார். பின்னர் பொருளை விட்டு சென்றவர் ஹைதராபாத், நிஜாம்பாத் மாவட்டம், ஆர்மூர் என்ற ஊரைச் சேர்ந்த ஜெயராம் மகன் சதாநாந்த்(50) என்று தெரியவந்தது. பின்னர் அவரை தொடர்பு கொண்டு யாசர் அரபாத் தன்னிடம் அந்த பொருட்கள் இருப்பதாக தெரிவித்தார்.
மகிழ்ச்சி அடைந்த சதாநாந்த் அவரின் உறவினர் ராகேசுடன் நேற்று தஞ்சாவூர், படடுக்கோட்டை வழியாக முத்துப்பேட்டைக்கு வந்து பின்னர் யாசர் அரபாத் வீட்டிற்கு வந்தார். அவரிடம் யாசர் அரபாத் தான் கண்டெடுத்த பொருட்களை சதாநாந்திடம் வழங்கினார். அப்பொழுது அவரின் தந்தை பகுருதீன,; நண்பர்கள் ஆதம் மாலிக், புரோஸ்கான், வர்த்தகக்கழக பொதுச் செயலாளர் கண்ணன் ஆகியோர் உடன் இருந்தனர். பொருட்களைப் மகிழ்ச்சியுடன் பெற்ற சதாநாந்த் கூறுகையில்: நான் 18 வருடங்களாக துபாயில் ஒரு கம்பெனியில் கார் கழுவும் கூலித்தொழில் செய்து வருகிறேன். மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த நான் மிகவும் கஷ்டப்பட்டு குடும்பத்தை நடத்தி வருகிறேன்.
எனது பொருட்கள் காணாமல் போனதும் கவலை அடைந்தேன். இன்றைக்கு எனது உழைப்பு வீண்போகாமல் மனித நேயத்துடன் கடவுள் போன்று இந்த சகோதரர் எனக்கு மீட்டுத்தந்துள்ளார். அவரை வாழ்நாளில் மறக்கமாட்டேன் என்றார். இந்த நிலையில் பொருட்களை விட்டு சென்றவரை மனித நேயத்துடன் மிகவும் சிரமம்பட்டு கண்டுபிடித்து அவரிடம் சேர்த்த வாலிபர் யாசர் அரபாத்தை முத்துப்பேட்டையைச் சேர்ந்த பொதுமக்கள் பாராட்டினர்.
செய்தி: நிருபர் மொய்தீன் பிச்சை, முத்துப்பேட்டை
நண்பர் பகுருதீன் அதிரை நிருபர் வலைதலத்தில்ல் என்னுடன் இணைந்து நேற்று இன்று நாளை தொடரை எழுதியவர்.
ReplyDeleteமருமகன் யாசர் பாராட்டுக்குரியவர். அவரது நல்லெண்ணம் வாழ்க.
நண்பர் பகுருதீன் அதிரை நிருபர் வலைதலத்தில்ல் என்னுடன் இணைந்து நேற்று இன்று நாளை தொடரை எழுதியவர்.
ReplyDeleteமருமகன் யாசர் பாராட்டுக்குரியவர். அவரது நல்லெண்ணம் வாழ்க.
அடுத்தவர் பொருளை எடுத்தால் அங்கேயுள்ள செக்யூரிட்டி இடமோ அல்லது அலுவலகத்திலோ கொடுத்து விட்டு போரவர்களையும் பார்க்கிறோம் அந்தப் பொருள் உரியவரிடம் சென்றடைந்ததா என்று யாருக்கும் தெரியாது. சிரமத்தை பாராமல் எடுத்தப் பொருளை உரியவரிடம் சேர்க்க வேண்டும் என்ற நல்லெண்ணம் கொண்ட சகோ. யாசர் அரபாத் செயல் பாராட்டக்கூடியதாக இருந்தாலும் சதாநாந்த் இச்சம்பவத்தை மற்றவரிடம் பகிறும்போது தமிழருக்கே பெருமை - தேடித்தந்து விட்டார் நமது சகோதரர் . கரவோசையுடன் வாழ்த்துக்கள்
ReplyDelete