.

Pages

Sunday, February 21, 2016

அதிரை அரசு மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம்!

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின், 68வது பிறந்தநாளை முன்னிட்டு அதிரை அரசு மருத்துவமனையில் இலவச சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.

நிகழ்ச்சிக்கு அதிரை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் அன்பழகன் தலைமை வகித்தார். முகாமை அதிரை பேரூராட்சி துணைத் தலைவர் என்.பிச்சை தொடங்கி வைத்து தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் செயல்படுத்தி வரும் மக்கள் நலப்பணிகள் குறித்து எடுத்துரைத்தார்.

முகாமில் அதிரை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் அன்பழகன் தலைமையில் மருத்துவர்கள் கெளசல்யா ராணி, ஹாஜா முகைதீன், சீனிவாசன், கார்த்திகேயன், ஷெரீன் உள்ளிட்டவர்கள் முகாமில் கலந்துகொண்ட பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் ஆலோசனை வழங்கினார்கள்.

முகாமில் பொதுநல மருத்துவம், காது-மூக்கு-தொண்டை, முட நீக்கம், மகப்பேறு நல மருத்துவம், கர்ப்பபை வாய் புற்றுநோய் கண்டறிதல், யுனானி மருத்துவம் உள்ளிட்டவைகளுக்கு மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின், 68 வது பிறந்த நாளையொட்டி, பசுமையை வலியுறுத்தி அதிரை அரசு மருத்துவமனை வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.  

இந்நிகழ்ச்சியில் அதிரை அரசு மருத்துவமனை மருத்துவர்கள், அதிரை பேரூராட்சி துணை தலைவர் என்.பிச்சை, கூட்டறவு வங்கி துணை தலைவர் எம்.ஏ தமீம் அன்சாரி, அதிரை பேரூராட்சி கவுன்சிலர்கள் சிவக்குமார், உதயகுமார், ஹாஜா முஹைதீன், தக்வா பள்ளி டிரஸ்ட் உறுப்பினர் ஹாஜா பகுருதீன், அபூ தாஹிர், லியாகத் அலி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.