எதிர்காலத்தில் உலகில் பயணிகள் ஒலி வேகத்தில் அன்றாட பயணம் செல்லும் நிலை உருவாகும் என்ற நம்பிக்கையை அதிகப்படுத்தும் விதமாக அதிகபட்சமாக மணிக்கு 1220 கிலோமீட்டர் வேகத்திலும், சராசரியாக மணிக்கு 962 கிலோமீட்டர் வேகத்திலும் செல்லும் வகையில் அதிவேக ஹைப்பர் லூப் ரயில் உருவாகி வருகிறது.
எதிர்காலத்தில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து சான் ஃபிரான்சிஸ்கோ வரை குழாய் வடிவில் இருக்கும் இந்த ஹைப்பர் லூப் ரயில் திட்டம் 16 பில்லியன் டாலர் செலவில் திட்டம் உள்ளது. 500 கிலோமீட்டருக்கும் அதிகமான இந்த தூரத்தை 35 நிமிடத்தில் அடைந்து விடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக திருச்சியிலிருந்து சென்னையை 25 நிமிடத்திற்குள் அடைந்து விட முடியும். எலான் மஸ்க் என்பவர் இந்த புதிய கண்டுபிடிப்பை அறிமுகம் செய்தவராவார்.
முதல் கட்டமாக அமெரிக்காவின் வடக்கு லாஸ் வேகாஸ் பகுதியில் இந்த ரயில் செல்வதற்கான 3மைல்களுக்கான சோதனை பாதை அமைக்கப்பட்டு இவ்வருடம் சோதனைஓட்டம் நடைபெற உள்ளது.மேலும் இத்திட்டம் 2021க்கு முழுமையாக நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது போக்குவரத்து துறையில் மற்றொரு பரிமாணம் என தயாரிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சமீபத்தில் துபாயில் நடைபெற்ற உலக உச்சி மாநாட்டில் ப்ரோகன் பாம்புரோகன் ( co-founder of Hyperloop) பேசுகையில் துபாயிலிருந்து அபுதாபி வரையிலான தூரத்தை ஹைப்பர் ரயில் தொழில் நுட்பத்தில் 15 நிமிடத்தில் அடைய முடியும் என தெரிவித்து அதற்கான திட்டத்தையும் மாநாட்டில் விவரித்தார். உலகின் பல்வேறு நாடுகளும் இத்திட்டம் குறித்து ஆய்வு செய்து வருகிறது. கடலுக்கு அடியிலும் இந்த ரயில் பாதை அமைக்கலாம் என்றும் இந்த ரயில் எதிர்காலத்தில் விமான பயணத்தை விட அதிவேகமாக செல்லும் போக்குவரத்து சாதனமாக உருவாக உள்ளது.
நன்றி: தினகரன்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.