.

Pages

Sunday, February 14, 2016

அதிரை அருகே ரூ 5 கோடி மதிப்பீட்டில் நவீன வசதியுடன் கூடிய புதிய விடுதி கட்டிடம் திறப்பு !

அதிராம்பட்டினம், பிப் 14
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள ராஜாமடம் அண்ணா பல்கலைகழக உறுப்பு பொறியியல் கல்லூரியின் மாணவர்கள் விடுதியில் தங்கி கல்வி பயிலும் வகையில் நவீன வசதிகளுடன் கூடிய 33 அறைகளைக் கொண்ட தரை மற்றும் முதல் தளங்களை உள்ளடக்கிய விடுதி கட்டிடம் ரூ 5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டி முடிக்கப்பட்டது. இந்த விடுதி கட்டிடங்களை தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள் காணொளி மூலம் இன்று திறந்து வைத்தார்.

திறப்பு விழா நிகழ்ச்சியில் அண்ணா பல்கலைகழக உறுப்பு பொறியியல் கல்லூரி புல முதல்வர் இளங்கோவன், சீனியர் வார்டன் தமிழரசன், பொதுப்பணித்துறை அலுவலர்கள், கல்லூரி பேராசிரியர்கள், அலுவலக ஆய்வக உதவியாளர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.