.

Pages

Monday, February 15, 2016

தஞ்சையில் மரம் நடும் திட்டம் தொடக்க விழா !

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் 68-வது பிறந்த நாளை முன்னிட்டு  மாபெரும் மரம் நடும் விழா மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மரக்கன்றுகளை மாண்புமிகு வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சர் திரு.ஆர்.வைத்திலிங்கம் அவர்கள் நட்டார்கள்.

பின்னர் வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது:-
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் 68வது பிறந்த நாளினையொட்டி, மாபெரும் மரம் நடும் வளர்ப்புத் திட்டத்தின்கீழ் 2016-ம் ஆண்டு மாநிலத்தில் 68 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்யும் திட்டத்தின் பணிகள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நடவு செய்து திட்டப்பணிகள் துவங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பசுமைப் போர்வையை அதிகரிக்கும் நோக்கில் பெருமளவில் மரக்கன்றுகள் நடவு செய்கிற “மாபெரும் மரம் நடும் திட்டம்” என்ற திட்டத்தின் கீழ் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு 2012 ஆம் ஆண்டுமுதல் வனம் மற்றும் வனத்திற்கு வெளியே வனத்துறை மூலம் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது.
   
2014ம் ஆண்டு முதல் வனத்துறையுடன் ஊரக வளர்ச்சி மூலம் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டத்தின்கீழ் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.  2012ம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை மாவட்டத்தில் 818750 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன.

நடப்பாண்டு இத்திட்டத்தின்கீழ் தஞ்சாவூர் மாவட்டத்தில் 219350 கன்றுகள் நடவு செய்திட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.   இதில் வனத்துறையின் மூலம்  25800 மரக்கன்றுகளும், மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தின்கீழ் 193550 மரக்கன்றுகளும் நடவு செய்யப்பட உள்ளது என மாண்புமிகு வீட்டுவசதி நகப்புற வளர்ச்சி மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சர் திரு.ஆர்.வைத்திலிங்கம் அவர்கள் தெரிவித்தார்கள்.
   
இந்நிகழ்ச்சியில் தஞ்சை பாராளுமன்ற உறுப்பினர் திரு.கு.பரசுராமன், திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் திரு.எம்.ரெத்தினசாமி, மாவட்ட வருவாய் அலுவலர் திரு.பெ.சந்திரசேகரன், உதவி வனப்பாதுகாவலர் டாக்;டர் ஆர்.முருகன், ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கத் தலைவர் திரு.ஆர்.காந்தி, மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் திரு.துரை.திருஞானம், நிலவள வங்கித் துணைத் தலைவர் திரு.துரை.வீரணன், கடகடப்பை ஊராட்சி மன்றத் தலைவர் திரு.ஜெ.செந்தில்வேலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

1 comment:

  1. தமிழக முதலமைச்சர் தேர்தல் அறிக்கையில் என்ன கூறினோம் என்று தெரியாமல் இருந்து விட்டு இப்போ இலவச தண்ணீர் திட்டத்தை துவக்குகிறார். மரம் வளர்ப்பு திட்டம் நல்லது தான் இதனை ஆட்சிக்கு வந்தவுடன் செய்திருந்தால் இந்நேரம் மரக் கண்டு வளர்ந்து பலனை மக்களுக்கு கொடுத்துக் கொண்டிருக்கும் . நல்லது செய்ய நேரம்பார்க்ககூடாது தான் ஆனா ஆட்சி முடிவதற்குள் எண்ணம் வந்ததே .. சந்தோசம்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.