.

Pages

Saturday, February 13, 2016

இமாம் ஷாஃபி மெட்ரிக் பள்ளி ஆண்டு விழாவில் 'கோட்டை அமீர்' விருது பெற்ற M.B. அபூபக்கர் அவர்கள் கெளரவிப்பு !

அதிரை இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் 42 ஆம் ஆண்டு விழா நிகழ்ச்சி இன்று மாலை பள்ளியின் வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

பள்ளியின் நிர்வாக பொருளாளர் ஹாஜி ஏ. அஹமது இப்ராஹீம் நிகழ்ச்சியில் தலைமையுரை ஆற்றினார். இதில் பள்ளி ஆற்றி வரும் சேவை குறித்து பேசினார். விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட குழந்தைகள் மற்றும் இருதய நோய் சிறப்பு மருத்துவர் எஸ். ஹாஜா முகைதீன் ஆண்டு விழா உரை நிகழ்த்தினார். இதில் கல்வியின் அவசியம் மற்றும் அதன் பயன் குறித்து விளக்கி கூறினார்.மேலும் பெற்றோருக்கான அறிவுரையும் குறிப்பிட்டு பேசினார்.

இந்த விழாவில் கடந்த குடியரசு தின விழாவில் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களிடமிருந்து கோட்டை அமீர் விருது பெற்ற எம்.பி அபூபக்கர் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கப்பட்டது. இவற்றை பள்ளி நிர்வாக பொருளாளர் ஹாஜி ஏ. அஹமது இப்ராஹீம் வழங்கினார்.

பின்னர் கல்வியில் சாதனை நிகழ்த்திய பள்ளி மாணவ, மாணவிகளுக்கு, ஆசிரியர் ஆசிரியைகள் - அலுவலக பணியாளர்கள் ஆகியோருக்கு சிறப்பு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பள்ளி மாணவ மாணவிகளின் கலை-அறிவுத்திறன் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

முன்னதாக பள்ளியின் மூத்த முதல்வர் பேராசிரியர் பர்கத் வரவேற்புரை ஆற்றினார். பள்ளியின் ஆண்டறிக்கையை பள்ளியின் முதல்வர் திருமதி எஸ் ஆஃப்தாப் பேகம் வாசித்தார். இதில் பள்ளி சார்பில் கல்வியில் மாணவ மாணவிகள் - ஆசிரியைகள் நிகழ்த்திய பல்வேறு சாதனைகளை பட்டியலிட்டார். விளையாட்டில் பள்ளி மாணவர்கள் நிகழ்த்திய சாதனைகளையும், பள்ளியின் சார்பில் நடத்தப்பட்ட சமூக விழிப்புணர்வு பணிகளையும் குறிப்பிட்டு பேசினார். 

நிகழ்ச்சிகள் அனைத்தையும் தமிழாசிரியர் பார்த்தசாரதி மற்றும் இத்ரீஸ் அஹமது ஆகியோர்  தொகுத்து வழங்கினார்கள். நிகழ்ச்சியின் இறுதியில் ஏ. யாசர் அரபாத் நன்றியுரை நிகழ்த்தினார்.

இந்த விழாவில் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பாளர்கள், ஊர் பிரமுகர்கள், முன்னாள் ஆசிரியர்கள் -பள்ளி அலுவலர்கள் - பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

செய்தி மற்றும் படங்கள்:
அஃப்ரீத் ( மாணவ செய்தியாளர் )
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.