அதிரை பேரூராட்சி பகுதியில் உள்ள 1 முதல் 21 வார்டுகளில் குவியும் குப்பை கூளங்கள், கழிவுகளை அதிரை பேரூராட்சியின் துப்புரவுதொழிலாளர்கள் அப்புறப்படுத்தி வருகின்றனர். இதில் நிரந்த ஊழியர்கள் 22 பேர்களும், ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக ஊழியர்கள் 53 பேர்களும் பணியாற்றுகின்றனர். இவர்கள் இரு வேறு குழுக்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு ஊதியமாக நாள் ஒன்றுக்கு ரூ 230 வீதம் மாதந்தோறும் ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த மாதம் பணியாற்றி ஊழியர்களின் சிலருக்கு ஊதியத்தில் சில நாட்கள் பிடித்தம் செய்துகொண்டு ஊதியம் வழங்கியதால் அதிருப்தி அடைந்த தற்காலிக ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்கள் இன்று காலை முதல் பணி நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அதிரையின் பிரதான இடங்களில் குப்பை, கூளங்கள் தேங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து பணி நிறுத்தத்தில் ஈடுபட்ட தற்காலிக ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்கள் நம்மிடம் அதிருப்தியுடன் கூறியதாவது...
நாங்கள் ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு வேறு குழுக்களாக மொத்தம் 53 பேர் துப்புரவு பணியாளர்களாக பணியாற்றி வருகிறோம். நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்து வரும் அதிரை பேரூராட்சி பகுதிக்கு இந்த எண்ணிக்கை போதுமானதாக இல்லை என்றாலும், நகர் முழுவதும் குவியும் குப்பை கூளங்களை அப்புறப்படுத்த வேண்டிய பணியில் தினமும் ஈடுபட்டு வருகிறோம். எங்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ 230 வீதம் மாதந்தோறும் ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஊதியம் போதுமானதாக இல்லை. இந்த ஊதியத்தை கொண்டே நாங்கள் குப்பை கூளங்கள் அப்புறப்படுத்தும் உதவும் அன்னக்கூடை, பொக்காலி, மிலார், மம்மெட்டி, அருவாள், வாங்கருவாள் உள்ளிட்ட சாதனங்களை எங்கள் செலவில் வாங்க வேண்டும்.
இந்நிலையில் கடந்த மாதம் நாங்கள் பணியாற்றியதற்கு வழங்க வேண்டிய ஊதியத்தை பிடித்தம் செய்துள்ளனர். 30 நாட்கள் பணியாற்றியவர்களுக்கு 26 நாட்களுக்கும், 28 நாட்கள் பணியாற்றியவர்களுக்கு, 24 நாட்களுக்கு என எங்கள் குழுக்களில் உள்ள சிலருக்கு இவ்வாறு பிரித்து ஊதியம் வழங்கப்பட்டது. அதிருப்தியடைந்த நாங்கள் ஊதியத்தை பெறவில்லை. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம்' என்றனர்.
இதுதொடர்பாக அதிரை பேரூராட்சி செயல் அலுவலர் ( கூடுதல் பொறுப்பு ) முனியசாமியை அலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசிய போது...
'ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தற்காலிக துப்புரவு பணியாளர்களுக்கு பணியாற்றிய நாட்களுக்கு கணக்கீடு செய்து ஊதியம் வழங்கப்பட்டது. பணியாற்றாத நாட்களுக்கு ஊதியம் வழங்கப்பட வில்லை' என்றார்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.