2015-ம் ஆண்டு மழை, கடந்த டிசம்பர் வர்தா புயல் என இயற்கை என்னதான் சென்னையைப் புரட்டிப் போட்டாலும், சென்னை வாசிகள் கம்பேக் ஆகி நார்மலுக்குத் திரும்பி விடுவது ஜனவரி மாத புத்தகக் கண்காட்சியில்தான். ஆண்டுதோறும் சோகம் மறந்து ஞானம் தேடும் கூட்டம் மொய்க்கும் இடமாக சென்னை புத்தகக் கண்காட்சி மாறி வருகிறது.இந்த வருடம் மீண்டும் பிரமாண்டத்தைக் காட்ட தயாராகிவிட்டது புத்தகக் காட்சி.
40-வது சென்னை புத்தகக் காட்சி இன்று (06.01.17) தொடங்கியிருக்கிறது. வரும் 19-ம் தேதி வரை செயின்ட் ஜார்ஜ் மேல்நிலைப் பள்ளியில் (பச்சையப்பன் கல்லூரி எதிரில்) நடைபெறுகிறது. தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம், புத்தக ஆர்வலர்களின் தேவைகளைக் கருத்தில் கொண்டு, வாசிப்பைப் பரவலாக்கவும், விழிப்பு உணர்வு ஏற்படுத்தவும் 1976-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 24-ம் தேதி தொடங்கப்பட்டது.
தமிழ்நாட்டிலேயே மிகப் பிரம்மாண்டமான முறையில் நடைபெறும் இந்தத் திருவிழா, கடந்த வருடம் மழை காரணமாக ஜூன் மாதம் நடைபெற்றது. 6 மாதம் தாமதமாக நடைபெற்றதால் வழக்கமான அளவைக் காட்டிலும் குறைந்த அளவே விற்பனை இருந்தது. இந்த முறை அதிக அளவு விற்பனை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
கண்காட்சியில் 700 அரங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. 80 சதவிகிதம் அளவுக்கு தமிழ் மொழி புத்தகங்களும் , 20 சதவிகித புத்தகங்கள் பிற மொழிகளிலும் அரங்குகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருக்கின்றன. 5 லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. வார நாட்களில் மதியம் 2 மணி முதல் இரவு 9 மணி வரையிலும், விடுமுறை மற்றும் வார இறுதி நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் புத்தக்கண்காட்சி திறந்திருக்கும்.
நுழைவுக் கட்டணமாக ரூ.10 வசூலிக்கப்படுகிறது. கண்காட்சி நடைபெறும் அனைத்து நாட்களும் வர விரும்புவோர்களுக்கு ரூ.50 சீசன் நுழைவு கட்டணச் சீட்டுகளும், 4 பேர் கொண்ட குடும்பத்தினர் தினமும் வந்து செல்ல ரூ.100 சீசன் நுழைவு சீட்டுகளும் கொடுக்கபடுகின்றன.
புத்தக்கண்காட்சியில் டெபிட், கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துவதற்காக 50 ஸ்வைப் மிஷின்கள் வைக்கப்பட்டுள்ளன. இதில் குறிப்பிட்ட தொகைக்கு கார்டை பயன்படுத்தி ஸ்வைப் செய்தால் அந்த மதிப்புக்கு நிகராக ரூ.50 மற்றும் ரூ.100 மதிப்புள்ள டோக்கன்கள் பெற்றுக் கொள்ளலாம். அதை ஸ்டால்களில் கொடுத்து புத்தகங்கள் பெற்றுக் கொள்ளலாம். இது தவிர புத்தகக் கண்காட்சியில் 2 நடமாடும் ஏ.டி.எம் மையங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
40-வது புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு, இந்த முறை புதியதாக ஸ்மார்ட் போன் செயலி ஒன்று அறிமுகபடுத்தப்பட்டுள்ளது. செயலியை கூகுல் ப்ளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து, எந்த எண்ணில் எந்த அரங்கு இருக்கிறது என்ற தகவலைப் பெற முடியும்.
இந்த ஆண்டு 15 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இடப்பற்றாக்குறை ஏற்படாத வகையில், செயின்ட் ஜார்ஜ் பள்ளிக்கு எதிரில் இருக்கும் பச்சையப்பன் கல்லூரியில் வாகனங்களை நிறுத்த வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு போட்டிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தமுறை புத்தகப் பிரியர்களுக்கு விருந்து படைக்கும் திருவிழாவாக புத்தகக் கண்காட்சி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- நந்தினி சுப்பிரமணி
நன்றி: விகடன்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.