அதிராம்பட்டினம், ஜன-09
தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான நலச்சங்கம் சார்பாக அதிராம்பட்டினம் கிளை தொடக்க விழா அதிராம்பட்டினத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.
கூட்டத்திற்கு பஹாத் முகமது தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் அதிரை கிளை சங்க நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் தலைவராக அ.பஹாத் முகமது, துணை தலைவர் அக்பர் அலி, செயலாளர் அ.முகமது ராவுத்தர், இணை செயளாலர் நீதிபதி, பொருலாளர் ஹ.ஜலீல் முகைதீன், கௌரவ ஆலோசகர்கள் சாகுல் ஹமீது (மணிச்சுடர்), நிஜாமுதீன், செல்வகுமார் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
1. உதவித்தொகை வேண்டி விண்ணபித்த 90 நபர்களுக்கு உடனே உதவித்தொகை வழங்க அரசை வலியுறுத்தப்படுகிறது மேலும் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கப்படும் விண்ணப்பங்களுக்கு ஒப்புகை சீட்டு வழங்க வேண்டும்.
2. இரண்டு ஆண்டுகளுக்கு தொகுப்பூதியத்தில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளுக்கு காலமுறை ஊதியம் வழங்க ஆணையிடும் அரசாணை எண் : 151 யை உடனே அமல்படுத்த வேண்டும்.
3. ஓவ்வொரு மாதமும் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
4. அரசு பொது சேவை மையத்தை நடத்த மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு அனுமதி வழங்க வேண்டும்.
5. அதிராம்பட்டினத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் மனநல காப்பகம் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க அரசை வலியுறுத்தப்படுகிறது.
6. இணையம் வழி மாற்றுத்திறனாளிகளை கணகெடுக்கும் பணியை மத்திய அரசு உடனே தொடங்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சங்க வளர்ச்சி நிதி வழங்கி உதவிய கொடையாளர்கள் எஸ்.எச் அஸ்லம் (முன்னாள் பேரூராட்சி தலைவர்), வழக்கறிஞர் அப்துல் முனாப், தொழிலதிபர் முத்துகிருஷ்ணன் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டன. மேலும் புதிதாக தொடங்கப்பட்ட சங்கத்திற்கு அலுவலக கட்டிடம் ஏற்பாடு செய்து கொடுத்த ஜாகிர் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் ராஜசேகர் (முன்னாள் மாவட்ட தலைவர்), குமரேசன் (முன்னாள் ஒன்றிய தலைவர்), கே.கிருஷ்ணமூர்த்தி (மாவட்ட இணை செயலாளர்), பாலு (ஒன்றிய பொறுப்பாளர், பிரபா (ஒன்றிய பொறுப்பாளர்), வீரகுமார் (தாமரங்கோட்டை), ருத்ரா (வழக்கறிஞர்) உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.