.

Pages

Sunday, August 5, 2018

கால்பந்து போட்டியில் தொடர் சாதனை நிகழ்த்திய காதிர் முகைதீன் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு (படங்கள்)

அதிராம்பட்டினம், ஆக.05
பட்டுக்கோட்டை கல்வி மாவட்டம், வட்ட அளவிலான பள்ளிகளுகிடையே கால்பந்துப் போட்டிகள் காதிர் முகைதீன் கல்லூரியில், கடந்த 03-08-2018 முதல் 05-08-2018 வரை நடைபெற்றது. இப்போட்டிகளை காதிர் முகைதீன் கல்வி நிறுவனங்களின் செயலர் எஸ்.ஜே அபுல் ஹசன் தொடங்கி வைத்தார்.

19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் 10 அணிகள் பங்குபெற்றன. இதில், காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆலத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பளியை 2-0 என்ற கோல் கணக்கிலும், பிருந்தாவனம் மேல்நிலைப்பள்ளியை 2-0  என்ற கோல் கணக்கிலும் வெற்றி பெற்றது. பின்னர் நடந்த இறுதி போட்டியில் கரம்பயம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியை 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று மாவட்டப் போட்டிக்கு தகுதி பெற்றது.

17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான கால்பந்து போட்டியில் 12 அணிகள் பங்கு பற்றனர். இதில், காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மற்றும் இமாம் ஷாஃபி மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளை வெற்றி பெற்றது. இதன் பின்னர் நடந்த இறுதி போட்டியில் பட்டுக்கோட்டை அரசு ஆண்கள்  மேல்நிலைப்பள்ளியை என்ற 2-0 கோல் கணக்கில் வெற்றி பெற்று மாவட்டப் போட்டிக்கு தகுதி பெற்றது.

மேலும், 14 வயதுக்கு உட்பட்ட கால்பந்து போட்டியில் இரண்டாம் இடம் பிடித்தது. வெற்றி பெற்ற மாணவர்கள், பயிற்சியளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் ஆகியோருக்கு பள்ளிச் செயலர் எஸ்.ஜே அபுல் ஹசன், பள்ளித் தலைமை ஆசிரியர் ஏ.எல் அசரப் அலி மற்றும் ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் பாராட்டுத் தெரிவித்தனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.