அதிராம்பட்டினம், செப்.18
அதிராம்பட்டினம் பேரூராட்சி பகுதியின் 8 ஊரணிகளுக்கு தடையின்றி நீர் நிரப்ப பம்பிங் ஸ்டேஷனுக்கு 24 மணி நேர தடையில்லா மும்முனை மின்சாரம் பெற உரிய நடவடிக்கை மேற்கொள்ள பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் வழக்குரைஞர் சி.வி சேகர் எம்.எல்.ஏ விடம் இன்று புதன்கிழமை காலை கோரிக்கை வைக்கப்பட்டது.
அதிராம்பட்டினம் பேரூராட்சி பகுதியின் 8 ஊரணிகளுக்கு அதிரை நசுவினி ஆறு ஓடையிலிருந்து சுமார் 1800 மீட்டர் நீளத்திற்கு குழாய் அமைத்து வறட்சி காலங்களில் 8 ஊரணிகளுக்கு நீர் நிரப்பும் பொருட்டு 20 எச்.பி. மோட்டார் அமைத்து நீர் இறைக்க திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு அதிரை பேரூராட்சி பொதுநிதி சுமார் ₹ 50 லட்சம் மதிப்பீட்டில் கடந்த 2015 ஆம் ஆண்டு பணிகள் நடந்து முடிந்து செயல்பாட்டுக்கு வந்தது. கிராமப்புற மின் இணைப்பு என்பதால், பகலில் 6 மணி நேரமும், இரவில் 6 மணி நேரம் மட்டுமே மின்சாரம் பெற முடிந்தது. இதனால், அடிக்கடி மின்தடை ஏற்பட்டு, குளங்களுக்கு நீர் நிரப்புவதில் தாமதம் ஏற்பட்டன.
இந்நிலையில், பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சி.வி சேகர் எம்.எல்.ஏ வை அவரது அலுவலகத்தில் இன்று புதன்கிழமை காலை அதிராம்பட்டினம் பேரூர் முன்னாள் துணைத் தலைவர் ஏ.பிச்சை, அதிராம்பட்டினம் கூட்டுறவு வங்கி துணைத்தலைவர் எம்.ஏ முகமது தமீம் ஆகியோர் சந்தித்து
நகர்புற மின்னூட்டிகளில் இருந்து மும்முனை மின்சாரம் பெறுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, எம்.எல்.ஏ சி.வி சேகர் மின்சார வாரிய உதவி செயற்பொறியாளரை தொடர்பு கொண்டு உடனடியாக மும்முனை மின்சாரம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கும்படி வேண்டுகோள் விடுத்தார். அப்போது, அமெரிக்கா அதிரையர் கூட்டமைப்பு (AAF) பிரதிநிதிகள் பேராசிரியர் எம்.ஏ முகமது அப்துல் காதர், எம்.எஸ்.எம் முகமது யூசுப், சேக்கனா எம்.நிஜாமுதீன் ஆகியோர் உடனிருந்தனர்.
அதன் தொடர்ச்சியாக, அதிராம்பட்டினம் பேரூராட்சி செயல் அலுவலர் எல். ரமேஷை சந்தித்து மின்சார வாரியம் மூலம் தடையில்லா மும்முனை மின்சாரம் பெற வேண்டிய அலுவல் பூர்வ பணிகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.