அதிராம்பட்டினம், செப்.11
திருவாரூர் ~ காரைக்குடி மார்க்கத்தில் டெமு ரயில் சேவை 2020 பிப்ரவரி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ரயில் புறப்படும் நேரம் மாற்றத்தால், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டாரப் பயணிகளுக்கு சென்னை ~ அதிராம்பட்டினம் இடையே இரு மார்க்கத்திலும் ரயிலில் பயணிக்கும் வாய்ப்பு அமைந்துள்ளது.

இதுகுறித்து அதிராம்பட்டினம் ரயில் பயணிகள் நல சங்க நிர்வாகிகள் ஹாஜி எம்.எஸ் ஷிகாபுதீன், ஹாஜி ஏ.அப்துல் ரெஜாக் ஆகியோர் கூறியது;
'எதிர்வரும் செப்.16 முதல், 2020 பிப்.29 வரை திருவாரூர் ~ காரைக்குடி மார்க்கத்தில் டெமு ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், ரயில் புறப்படும் நேரமும் மாற்றப்பட்டுள்ளது.
அதன்படி, திருவாரூரிலிருந்து காலை 6 மணிக்கு புறப்படும் ரயில், பகல் 12.30-க்கு காரைக்குடிக்கு செல்கிறது. பின்னர் அங்கிருந்து 2.30 மணிக்கு புறப்படும் ரயில், இரவு 9.30-க்கு திருவாரூருக்கு வரும் எனவும் தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
இதனால், சென்னையிலிருந்து புறப்படும் மன்னை எக்ஸ்பிரஸ் அதிகாலை 3.10 மணிக்கும், காரைக்கால் எக்ஸ்பிரஸ் அதிகாலை 4.25 மணிக்கும் திருவாரூர் ரயில் நிலையத்திற்கு வந்தடையும். இதில் பயணிக்கும் அதிராம்பட்டினம் பயணிகள் ரயிலிருந்து இறங்கி அங்கிருந்து காலை 6 மணிக்கு புறப்படும் டெமு ரயில் மூலம் அதிராம்பட்டினம் ரயில் நிலையத்திற்கு காலை 8.32 மணிக்கு வந்தடையலாம்.
அதேபோல், அதிராம்பட்டினத்திலிருந்து மாலை 6.22 மணிக்கு புறப்படும் டெமு ரயில், இரவு 9.30-க்கு திருவாரூருக்கு வரும், அங்கிருந்து இறங்கி, இரவு 10.25 மணிக்கு புறப்படும் சென்னை எக்ஸ்பிரஸிலும், இரவு 11.05 மணிக்கு புறப்படும் மன்னை எக்ஸ்பிரஸிலும் பயணிக்கலாம்.

திருவாரூர் ~ காரைக்குடி மார்க்கத்தில் டெமு ரயில் சேவையை பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்துவதன் மூலம் எதிர்காலத்தில் இந்த மார்க்கத்தில் அதிகமான ரயில் சேவையை பெற முடியும். மேலும், சென்னையிலிருந்து அதிராம்பட்டினம் வரை செல்ல குறைந்த கட்டணம் (அதாவது, சென்னை ~ திருவாரூர் வரை எக்ஸ்பிரஸ் ரயிலுக்கான கட்டணமும், திருவாரூர் ~ அதிராம்பட்டினம் வரை பாசஞ்சர் ரயிலுக்கான கட்டணமும்) செலுத்தி முன்பதிவு கூடத்தில் ரயில் டிக்கெட் பெற முடியும்.
மேலும், திருவாரூர் ~ காரைக்குடி மார்க்கத்தில் காலியாக உள்ள கேட் கீப்பர் பணியிடங்கள் விரைவில் நிரப்புவதற்கு தென்னக ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதனால், இந்த மார்க்கக்தில் செல்லும் டெமு ரயிலின் வேகம் அதிகரிக்கக்கூடும். பயண நேரமும் குறையும்' என்றனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.