.

Pages

Tuesday, September 24, 2019

காதிர் முகைதீன் கல்லூரியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா (படங்கள்)

அதிராம்பட்டினம், செப்.24
அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி மனையியல் துறை மற்றும் போஷன் அபியான் மா திட்டத்தின் கீழ், மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் இணைந்து நடத்திய தேசிய ஊட்டச்சத்து மாத விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

விழாவிற்கு, கல்லூரி முதல்வர் ஏ.முகமது முகைதீன் தலைமை வகித்து விழாவை தொடங்கி வைத்துப் பேசினார். கல்லூரி துணை முதல்வர் எம்.முகமது முகைதீன், விலங்கியல் துறைத் தலைவர் பேராசிரியர் ஏ.அம்சத், கணிதத்துறை தலைவர் டி.லெனின், மனையியல் துறை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் எஸ்.ரவீந்தரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் மாவட்ட சமூக நல அலுவலர் கே.ராஜேஸ்வரி கலந்துகொண்டு பேசியது; 
வளர் இளம் பெண்கள் சரியான ஊட்டச்சத்து உணவு எடுத்துக்கொண்டால் தான் அவர்கள் சரியான வளர்ச்சி பெற்று உடல்நலத்தில் சிறந்து விளங்குவதுடன் கல்வியிலும் சிறந்து விளங்க முடியும். சரியான சத்துணவு இல்லாத காரணத்தினால் தான் ரத்தசோகை நோய் ஏற்படுகிறது. இதனால் கர்ப்ப காலத்தின்போது குழந்தைகளுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. எனவே, எந்தந்த வயதில் எதுபோன்ற உணவுகளை உண்ண வேண்டும் என்று இங்கு காட்சி படுத்தப்பட்டுள்ள பாரம்பரிய உணவு மூலம் தெரிந்து கொள்ளலாம்' என்றார்.

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் (பொ) கே. சாந்தி, பாரம்பரிய உணவின் அவசியம் குறித்தும், துரித உணவுகளின் தீமைகள் பற்றியும், ஊட்டச்சத்தின் அவசியம் குறித்தும் பேசினார்.

விழாவின் ஒரு பகுதியாக, ஒருநாள் உணவு, பாதுகாப்பு தரும் உணவு, கர்ப்பகால உணவு, வளர்ச்சி தரும் உணவு, சக்தி தரும் உணவு ஆகிய பிரிவுகளில், சத்துமாவு புட்டு, சுண்டல், கொழுக்கட்டை, பணியாரம் மற்றும் கம்பு, ராகி, சோளம், கேழ்வரகு உள்ளிட்ட சிறுதானிய வகைகளால் ஆன 100-க்கும் மேற்பட்ட பாரம்பரிய உணவு வகைகள் தயார் செய்து காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தது.

விழாவையொட்டி, கல்லூரி மாணவிகளுக்கு நடத்தப்பட்ட பேச்சு, கோலம், ஓவியம் ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மேலும், விழிப்புணர்வு பேரணி, கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

விழாவில், கல்லூரிப் பேராசிரியர்கள், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட மேற்பார்வையாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், 300-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு பாரம்பரிய உணவுப் பொருள்களை பார்த்து, சுவைத்து மகிழ்ந்தனர்.

முன்னதாக, கல்லூரி மனையியல் துறைத்தலைவர் பேராசிரியை எஸ்.ஆரிபா வரவேற்றுப் பேசினார். நிகழ்ச்சியினை, மனையியல் துறைத்தலைவர் பேராசிரியை எஸ்.ஆரிபா, பேராசிரியை ஏ. ஆர்த்தி  ஆகியோர் தொகுத்து வழங்கினர். விழாவில் கலந்து கொண்ட அனைவரும் ஊட்டச்சத்து உறுதிமொழி ஏற்றனர். இதையடுத்து, விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.