அதிராம்பட்டினம், செப்.04
அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், 'HONESTY SHOP' என்ற பெயரில் மாணவர்களுக்கு தேவைப்படும் கல்வி உபகரணங்கள் அடங்கிய ஸ்டேசனரி பொருட்களின் விற்பனை அங்காடி இன்று புதன்கிழமை தொடங்கப்பட்டுள்ளது.
சிறப்பு விருந்தினராக இஜாபா பள்ளிவாசல் தலைமை இமாம் மவ்லவி. அப்துல் ஹாதி முப்தி கலந்துகொண்டு 'அமானிதம்' (நம்பகத்தன்மை) என்ற தலைப்பில் சிறப்புரை வழங்கி முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். அங்காடியில் வைக்கப்பட்டுள்ள பேனா, பென்சில், கலர் பென்சில், ரப்பர் (அழிப்பான்), பேப்பர், சார்ட் பேப்பர் உள்ளிட்ட ஒவ்வொரு பொருட்கள் மீதும் விற்பனை விலை எழுதப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்களுக்கு தேவைப்படும் பொருட்களை சுயமாக எடுத்துக்கொண்டு அதற்குரிய முழு கட்டணத்தையும் அருகில் உள்ள பணப்பெட்டியில் செலுத்தினர்.
இதுகுறித்து பள்ளி துணைத் தாளாளர் எம்.எஸ் முகமது ஆஜம் கூறியது;
'எங்கள் பள்ளியில் தொடங்கி இருக்கும் 'நேர்மை அங்காடி', மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. முதல் நாளில் மாணவர்கள் ஆர்வமாக தங்களுக்கு தேவைப்படும் பொருட்களை விற்பனையாளர்கள் இன்றி சுயமாக கட்டணம் செலுத்தி எடுத்துச்சென்றனர். இன்று விற்பனையான பொருட்களுக்குரிய கட்டணம் முழுவதும் திரும்ப பெறப்பட்டது. எங்களுக்கு எவ்வீத இழப்பீடும் ஏற்படவில்லை. எங்கள் பள்ளி மாணவர்களின் ஒழுக்கம், நேர்மை, நம்பகத்தன்மை போன்ற சிறந்த பண்புகளை வளர்க்க இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது' என்றார்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.