மேட்டூர் அணையிலிருந்து அதிகளவில் தண்ணீர் திறக்கப்படுவதால் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளின் கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பது:
கர்நாடகத்தில் பெய்து வரும் மழை காரணமாக, மேட்டூர் அணைக்கு அதிக அளவில் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் காவிரி நீர் பாயும் ஆறுகள், குளங்கள் மற்றும் நீர் நிலைப் பகுதிகளிலும், தண்ணீர் வரத்து அதிகமாக உள்ள அபாயகரமான இடங்களிலும் பொதுமக்கள் குளித்தல், நீச்சல் அடித்தல், மீன் பிடித்தல், சுயபடம் (செல்பி) எடுத்தல் மற்றும் இதர பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும். ஆறுகள், கால்வாய்கள், வாய்க்கால்கள் மற்றும் நீர் நிலைகளில் அதிக அளவில் தண்ணீர் திறக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே, நீர் நிலை அருகிலுள்ள குழந்தைகள் விளையாடச் செல்லாமல் பெற்றோர்கள் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்.
விவசாயிகள் தங்களது கால்நடைகளை நீர் நிலைகள் வழியாக அழைத்து செல்வதைத் தவிர்க்க வேண்டும். நீர்நிலைகளில் உள்ள பள்ளங்களை முன்னதாகவே தெரிந்து கொண்டு முன்னெச்சரிக்கையோடு பயன்படுத்த வேண்டும். தண்ணீர் திறந்து விடப்படும் கன அடி அளவு குறித்த விவரங்களை அவ்வப்போது தெரிந்து கொள்ள வேண்டும்.
கரையோரப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு தண்டோரா மற்றும் ஒலிபெருக்கி மூலமாக எச்சரிக்கை செய்ய வருவாய்த் துறை, காவல் துறை, ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.