அதிராம்பட்டினம், செப்.23
அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி முதுகலை மற்றும் ஆராய்ச்சி விலங்கியல் துறை சார்பில், புற்றுநோய் விழிப்புணர்வு கருத்தரங்க நிகழ்ச்சி கல்லூரி அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ஏ.முகமது முகைதீன் தலைமை வகித்து, கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசியது; 'நவீன ரக துரித உணவுகளை தவிர்த்து, நமது பாரம்பரிய உணவான சிறுதானிய உணவு வகைகளை நாம் பயன்படுத்துவதினால், புற்றுநோய் வராமல் தடுக்க முடியும். தினமும், உடற்பயிற்சி மேற்கொள்வது அவசியம்' என்றார்.
சிறப்பு விருந்தினராக வெங்கரை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் டாக்டர் ஜி.எஸ் ராஜதுரை கலந்துகொண்டு, புற்றுநோயின் அறிகுறிகள், புற்று நோய்க்கான பரிசோதனைகள், இதற்கான சிகிச்சைகள், தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து விரிவுரை வழங்கினார்.
முன்னதாக, கல்லூரி விலங்கியல் துறைத்தலைவர் பேராசிரியர் ஏ. அம்சத் வரவேற்றுப் பேசினார். நிகழ்ச்சிகளை, பேராசிரியை என். வசந்தி தொகுத்தளித்தார். முடிவில், சங்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் வி. கானப்ரியா நன்றி கூறினார்.
இந்நிகழ்ச்சியில், கல்லூரிப் பேராசிரியர்கள் கே. முத்துக்குமரவேல், ஓ.சாதிக் ஏ. மஹாராஜன், மாணவ, மாணவிகள் பலர் கலந்துகொண்டனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.