அதிராம்பட்டினம், செப்.06
அதிராம்பட்டினம் அரிமா சங்கம் சார்பில், ஆசிரியர் தின விழா புதுக்கோட்டை உள்ளூர் ஆக்ஸ்போர்டு மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.
விழாவிற்கு, அதிராம்பட்டினம் அரிமா சங்கத் தலைவர் எம். அப்துல் ஜலீல் தலைமை வகித்தார். செயலாளர் எம்.நிஜாமுதீன், பொருளாளர் எஸ்.எம் முகமது முகைதீன், நிர்வாக அலுவலர் எம்.நெய்னா முகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பள்ளித்தாளாளர் என்.உதயகுமார் வரவேற்றுப் பேசினார். சிறப்பு விருந்தினராக அரிமா சங்க மாவட்ட உயர் கல்விக்கான வழிகாட்டுதல் பிரிவு (Higher studies guidance) தலைவர் பேராசிரியர் எம்.ஏ முகமது அப்துல் காதர் கலந்துகொண்டு ஆசிரியர் தின விழா பேரூரை நிகழ்த்தினார்.
விழாவில், ஆசிரியரின் சிறப்பைப் போற்றும் வகையில், பள்ளி மாணவிகள் பங்கேற்ற பேச்சுப் போட்டி, பட்டிமன்ற நிகழ்ச்சி, கல்வி விழிப்புணர்வு பொம்மலாட்டம் உள்ளிட்ட பல்சுவை கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விழாவில், 2019~2020 ஆம் ஆண்டிற்கான அரிமா சங்க 'நல்லாசிரியர்' விருதுக்கு தேர்வாகி உள்ள பள்ளி முதுகலை ஆசிரியர் பி. சுதாகருக்கு சால்வை அணிவித்து நினைவுப்பரிசு வழங்கி பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
விழாவில், பள்ளி ஆசிரியர்கள், அதிராம்பட்டினம் அரிமா சங்க நிர்வாகிகள் எம்.முகமது அபூபக்கர், சி.சார்லஸ், எம்.கே.எம் அபூபக்கர் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.