.

Pages

Thursday, September 26, 2019

ரோட்டரி சங்கம் நடத்திய இலவச பொது மருத்துவ முகாமில் 350 பேருக்கு பரிசோதனை (படங்கள்)

அதிராம்பட்டினம், செப்.21
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம், தஞ்சை மீனாட்சி மருத்துவமனை இணைந்து இலவச பொது மருத்துவ முகாம் ராஜாமடம் அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று (செப்.26) வியாழக்கிழமை காலை நடைபெற்றது.

முகாமிற்கு அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கத் தலைவர் டி.முகமது நவாஸ்கான் தலைமை வகித்தார். ரோட்டரி சங்கச் செயலர் எஸ்.சாகுல் ஹமீது, பொருளாளர் ஆர்.பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முகாமை, ராஜாமடம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தொடங்கி வைத்துப் பேசினார். முகாமில். ராஜாமடம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த 350 நோயாளிகளுக்கு தஞ்சை மீனாட்சி மருத்துவமனை மருத்துவக் குழுவினர் ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரை அளவு, உடல் எடை ஆகியவை பரிசோதித்தனர்.

முகாமில், 122 பேருக்கு ரூ. 200 மதிப்புள்ள இசிஜி இலவசமாக எடுக்கப்பட்டது. மேலும் இருதயம் மற்றும் சக்கரை நோய்க்கான சிறப்பு மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டன. இம்முகாமில், ரோட்டரி சங்க நிர்வாகிகள் வைரவன் வெங்கடேஷ், ஜெ.அமீன் நவாஸ்கான், மன்சூர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.