அதிராம்பட்டினம், செப்.11
அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி முதுகலை மற்றும் ஆராய்ச்சி விலங்கியல் துறை சார்பில், விலங்கியல் சங்கம் தொடக்கம் மற்றும் இளங்கலை, முதுகலை முதலாம் ஆண்டு மாணவர்கள் வரவேற்பு விழா இன்று செவ்வாய்க்கிழமை கல்லூரியில் நடைபெற்றது.
விழாவிற்கு கல்லூரி முதல்வர் ஏ. முகமது முகைதீன் தலைமை வகித்து,
விலங்கியல் சங்கத்தை தொடங்கி வைத்து உரை நிகழ்த்தினார். இதில், விலங்கியல் கல்வி படிப்பதால், மாணவர்களுக்கு கிடைக்கக்கூடிய உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள் பற்றி எடுத்துரைத்தார்.
சிறப்பு விருந்தினராக திருவாரூர் திரு.வி.க கலைக் கல்லூரி விலங்கியல் துறைத் தலைவரும், பல்கலைக்கழக செனட் உறுப்பினருமாகிய பேராசிரியர் பி. ராஜாராமன் கலந்துகொண்டு சிறப்புரை வழங்கினார்.
கல்லூரி விலங்கியல் துறைத்தலைவர் பேராசிரியர் ஏ. அம்சத் சங்கத்தின் நோக்கம் மற்றும் செயல்பாடுகள் பற்றி அறிமுகப்படுத்திப் பேசினார்.
விழாவில், சங்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஓ.சாதிக், விலங்கியல் துறை பேராசிரியர்கள் கே. முத்துக்குமரவேல், வி. கானப்ரியா, ஏ. மஹாராஜன், ஜே சுகுமாரன், என். வசந்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.
முன்னதாக, விலங்கியல் சங்கச் செயலாளர் ஆர். சூர்யா வரவேற்றுப் பேசினார். சங்கப் பொருளாளர் ஏ.முகமது சமீர் முதலாமாண்டு மாணவர்களை வரவேற்றார். நிகழ்ச்சிகளை, மாணவி ஆர்.ஜெயபாரதி, சி.கார்த்திகா ஆகியோர் தொகுத்து வழங்கினார். முடிவில் விலங்கியல் சங்கத் தலைவர் மாணவி ஆர். ரம்யா நன்றி கூறினார். இவ்விழாவில் கல்லூரி பேராசிரியர்கள், அலுவலக ஆய்வகப் பணியாளர்கள், மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.
அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி முதுகலை மற்றும் ஆராய்ச்சி விலங்கியல் துறை சார்பில், விலங்கியல் சங்கம் தொடக்கம் மற்றும் இளங்கலை, முதுகலை முதலாம் ஆண்டு மாணவர்கள் வரவேற்பு விழா இன்று செவ்வாய்க்கிழமை கல்லூரியில் நடைபெற்றது.
விழாவிற்கு கல்லூரி முதல்வர் ஏ. முகமது முகைதீன் தலைமை வகித்து,
விலங்கியல் சங்கத்தை தொடங்கி வைத்து உரை நிகழ்த்தினார். இதில், விலங்கியல் கல்வி படிப்பதால், மாணவர்களுக்கு கிடைக்கக்கூடிய உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள் பற்றி எடுத்துரைத்தார்.
சிறப்பு விருந்தினராக திருவாரூர் திரு.வி.க கலைக் கல்லூரி விலங்கியல் துறைத் தலைவரும், பல்கலைக்கழக செனட் உறுப்பினருமாகிய பேராசிரியர் பி. ராஜாராமன் கலந்துகொண்டு சிறப்புரை வழங்கினார்.
விழாவில், சங்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஓ.சாதிக், விலங்கியல் துறை பேராசிரியர்கள் கே. முத்துக்குமரவேல், வி. கானப்ரியா, ஏ. மஹாராஜன், ஜே சுகுமாரன், என். வசந்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.
முன்னதாக, விலங்கியல் சங்கச் செயலாளர் ஆர். சூர்யா வரவேற்றுப் பேசினார். சங்கப் பொருளாளர் ஏ.முகமது சமீர் முதலாமாண்டு மாணவர்களை வரவேற்றார். நிகழ்ச்சிகளை, மாணவி ஆர்.ஜெயபாரதி, சி.கார்த்திகா ஆகியோர் தொகுத்து வழங்கினார். முடிவில் விலங்கியல் சங்கத் தலைவர் மாணவி ஆர். ரம்யா நன்றி கூறினார். இவ்விழாவில் கல்லூரி பேராசிரியர்கள், அலுவலக ஆய்வகப் பணியாளர்கள், மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.