அதிராம்பட்டினம், செப்.24
தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தி பார்சல் கட்டப்பட்ட உணவுப் பொருட்களை பேரூராட்சி அதிகாரிகள் கைப்பற்றி அழித்தனர். மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திய, விற்பனை செய்த கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், பேரூராட்சிகள் உதவி இயக்குநர் அறிவுறுத்தலின்படி, அதிராம்பட்டினம் பேரூராட்சி செயல் அலுவலர் எல் ரமேஷ் தலைமையில், அதிராம்பட்டினம் பகுதிகளில் உள்ள சுமார் 200 க்கும் மேற்பட்ட கடைகளில், செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் கே.அன்பரசன், மேற்பார்வையாளர் வெங்கடேசன் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள், துப்புரவுப் பணியாளர்கள், அதிராம்பட்டினம் பகுதிகளில் நடத்திய ஆய்வில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனைக்காக இருப்பு வைத்திருந்தது கண்டறியப்பட்டது.
ஆய்வில், தடைசெய்யப்பட்ட 6.50 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், ரூ.3,750 அபராதம் விதிக்கப்பட்டது. உணவகங்களில் தடைசெய்யப்பட்ட பொருள்களைப் பயன்படுத்தி பார்சல் கட்டுவதும், தடை செய்யப்பட்ட 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்வதும் குற்றத்திற்குரிய செயல் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.