.

Pages

Thursday, September 26, 2019

பம்பிங் ஸ்டேஷனுக்கு மும்முனை மின்சாரம்: மின்சார வாரிய அதிகாரிகள் ஆய்வு (படங்கள்)

அதிராம்பட்டினம், செப்.26
அதிராம்பட்டினம் பேரூராட்சி பகுதியின் 8 ஊரணிகளுக்கு நசுவுனி ஆற்று ஓடைலிருந்து தடையின்றி நீர் நிரப்புவதற்காக அமைக்கப்பட்ட பம்பிங் ஸ்டேஷனுக்கு, 24 மணி நேர தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு, அதிராம்பட்டினம் பேரூர் முன்னாள் துணைத் தலைவர் ஏ.பிச்சை, அதிராம்பட்டினம் கூட்டுறவு வங்கி துணைத்தலைவர் எம்.ஏ முகமது தமீம் ஆகியோர் கடந்த (செப்.18) அன்று பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் வழக்குரைஞர் சி.வி சேகர் எம்.எல்.ஏ வை, நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து, பட்டுக்கோட்டை மின்சார வாரிய கோட்டபொறியாளர் மாறன் தலைமையில், அதிராம்பட்டினம் மற்றும் துவரங்குறிச்சி மின்சார வாரிய அலுவலர்கள் இன்று வியாழக்கிழமை காலை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். விரைவில் திட்ட வரைவு  தயார் செய்து அதிராம்பட்டினம் பேரூராட்சி செயல் அலுவலருக்கு அனுப்பி வைப்பதாக தெரிவித்தனர்.

அப்போது, அதிராம்பட்டினம் பேரூர் முன்னாள் துணைத் தலைவர் ஏ.பிச்சை, அதிராம்பட்டினம் கூட்டுறவு வங்கி துணைத்தலைவர் எம்.ஏ முகமது தமீம் ஆகியோர், பம்பிங் ஸ்டேஷனுக்கு மும்முனை மின்சாரம் வழங்கும் திட்டத்தை நிறைவேற்றும் வரையில், பட்டுக்கோட்டை எம்.எல்.ஏ சி.வி சேகர் கோரிக்கை ஏற்று, கடந்த 3 தினங்களாக வழங்கி வருகிற மும்முனை மின்சாரத்தை வரும் டிசம்பர் மாதம் இறுதி வரை நீடிக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.