அதிராம்பட்டினம், செப்.10
'வாட்ஸ் அப்' உள்ளிட்ட சமூக வலைதளங்களில் 'பைப் புதைத்து அதிராம்பட்டினம் பகுதிக்கு தண்ணீர் கொண்டு வருவதற்கு எம்.கே.என். டிரஸ்ட் நிர்வாகம் அனுமதி மறுக்கிறது' என பரவும் பொய்யான அவதூறு செய்திக்கு டிரஸ்ட் நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து டிரஸ்ட் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பது;
'அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் கடந்தாண்டு போதிய மழையின்றி ஏற்பட்டுள்ள குடிதண்ணீர் பற்றாக்குறையை போக்க எம்.கே.என் மதரஸாவுக்கு சொந்தமான சேண்டாக்கோட்டை கிராமத்திலிருந்து வரும் நிலத்தில் டி.ஐ பைப் மூலம் அதிராம்பட்டினம் நகருக்கு குடிதண்ணீர் கொண்டுவர அதிராம்பட்டினம் பேரூர் நிர்வாக செயல் அலுவலர் எங்களிடம் அனுமதி கோரியதன் அடிப்படையில் தமிழ்நாடு வஃக்பு வாரியத்திற்கு கடிதம் மூலமும், நேரிலும் தெரிவித்தும், தஞ்சாவூர் வஃக்பு கண்காணிப்பாளருக்கு குடிதண்ணீர் பற்றாக்குறையை விளக்கியதின் பேரிலும் அனுமதி பெற்று, அதிராம்பட்டினம் பேரூராட்சி செயல் அலுவலருக்கு கடந்த 27-06-2019 அன்று கடிதம் மூலம் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும், இதுதொடர்பாக அதிராம்பட்டினம் பேரூராட்சி செயல் அலுவலருக்கு கடந்த 18-07-2019 அன்று மீண்டும் நினைவூட்டல் கடிதம் அனுப்பப்பட்டும் இன்று (செப்.10) வரை அவரிடமிருந்து எந்தவித பதிலும் பெறப்படவில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
அதிராம்பட்டினம் பகுதி பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய டிரஸ்ட் நிர்வாகத்திற்கு சொந்தமான நிலத்தில் பைப் புதைத்து தண்ணீர் கொண்டு வருவதில் எங்களால் எவ்வித தாமதமும் ஏற்படவில்லை. உண்மை இவ்வாறு இருக்க, கடந்த சில நாட்களாக 'வாட்ஸ் அப்' உள்ளிட்ட சமூக வலைதளங்களில் 'பைப் புதைத்து அதிராம்பட்டினம் பகுதிக்கு தண்ணீர் கொண்டு வருவதற்கு எம்.கே.என். டிரஸ்ட் நிர்வாகம் அனுமதி மறுக்கிறது' என்ற பொய்யான அவதூறு செய்தி பரப்பப்பட்டு வருகிறது. இந்த பொய் செய்தியை யாரும் நம்ப வேண்டாம் என்று அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம். இந்த அவதூறு செய்தியை தொடர்ந்து பரப்புவோர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க நிர்வாகம் சார்பில், ஆலோசிக்கப்பட்டு வருகிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்' என இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.