.

Pages

Thursday, September 26, 2019

அதிராம்பட்டினத்தில் திமுக இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாம்!

அதிராம்பட்டினம், செப்.26
திமுக இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாம் அதிராம்பட்டினம் பேரூராட்சியில் உள்ள 21 வார்டுகளிலும் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, திமுக மாநில செயற்குழு உறுப்பினரும், ஒரத்தநாடு கிழக்கு ஒன்றிய செயலாளருமான மு.காந்தி அதிராம்பட்டினம் பேரூர் பகுதி இளைஞர்களுக்கு விண்ணப்பப் படிவத்தை வழங்கி, முகாமைத் தொடங்கி வைத்தார்.

முகாமுக்கு, அக்கட்சியின் அதிராம்பட்டினம் பேரூர் செயலாளர் இராம. குணசேகரன் தலைமை வகித்தார். இளைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் ஆரோ.அருள், பட்டுக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் பா.இராமநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், அக்கட்சியின் நிர்வாகிகள் ஏ.எம்.ஒய் அன்சர்கான், கோடி முதலி, எம். பகுருதீன், இன்பநாதன், முல்லை ஆர்.மதி, முகமது இப்ராஹீம், கோடி நாகராஜ், கே.இத்ரீஸ் அகமது, செய்யது முகமது, அய்யாவு, என்.கே.எஸ் முகமது சரீப்,  அப்துல் அஜீஸ், இ.வாப்பு மரைக்காயர், நூர் முகமது, நியாஸ் அகமது உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 
  
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.