.

Pages

Monday, September 23, 2019

அதிராம்பட்டினம் பகுதியில் தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த மெட்ரிக். பள்ளிகள் கோரிக்கை!

அதிராம்பட்டினம், செப்.23
அதிராம்பட்டினம் பகுதி பொதுமக்களிடம் தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த, மெட்ரிக். பள்ளி நிர்வாகிகள் சார்பில், மாவட்ட பொது சுகாதாரத்துறையிடம் கோரிக்கை விடுக்க முடிவு செய்திருப்பதாக தெரிவித்தனர்.

தமிழகத்தில் பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தொண்டை அடைப்பான் நோய் அறிகுறி இருப்பது தெரியவந்ததை அடுத்து, இதற்கான தடுப்பூசி தமிழக அரசால் இலவசமாக வழங்கப்படுகிறது.

அதன்படி, மாவட்ட பொது சுகாதாரத்துறை சார்பில், அரசு மருத்துவர்கள் மூலம் அதிராம்பட்டினம் பகுதியில் உள்ள மெட்ரிக். பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு இன்று (செப்.23) திங்கட்கிழமை தடுப்பூசி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

தடுப்பூசி குறித்து தவறான வதந்தி பரவியதால், மெட்ரிக். பள்ளிகளுக்கு வந்திருந்த மருத்துவக் குழுவினரிடம், தடுப்பூசிப் போட வேண்டாம் என பெற்றோர் குரல் எழுப்பினர். இதையடுத்து, மருத்துவக் குழுவினர் மாணவர்களுக்கு தடுப்பூசி போடாமல் பள்ளியை விட்டு வெளியேறினர்.

இந்நிலையில், அதிராம்பட்டினம் மெட்ரிக். பள்ளிகளின் நிர்வாகிகள் சார்பில், அதிராம்பட்டினம் பகுதி பெற்றோருக்கு ஏற்பட்டுள்ள சந்தேகத்தை போக்கி, தடுப்பூசியின் அவசியம் குறித்து எடுத்துரைத்து, அவர்களுக்கு தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தக்கோரி மாவட்ட பொது சுகாதாரத்துறையிடம் மனு அளிக்க இருப்பதாக மெட்ரிக். பள்ளி நிர்வாகிகள் எம்.எஸ் முகமது ஆஜம், எம். முகமது இம்தியாஸ், ஜெ. அமீன் நவாஸ்கான், பாக்கர் ஹாஜியார். எஸ்.முகமது சலீம் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். 

2 comments:

  1. தடுப்பூசி
    சில அதிகமாக படிச்ச அதிமேதாவிகள் சொல்கிறார்கள். தடுப்பூசி போட்டுக்கிட்டா வருகிற நோய் நம்மல பாதிக்காதுனு.
    அப்படினா குழந்தை பிறந்த உடனிருந்து 18 மாதம் வரை தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. (வியாபர) மருத்துவர்களிடம் ஏன் இந்த தடுப்பூசி என்றால் அவர்களும் அந்த நோய், இந்த நோய், வரபோகும் நோய் அனைத்திற்க்கும் பாதுகாப்பான தடுப்பூசிதான் இது என்று விளக்கம் சொல்கிறார்கள்.
    நாங்கள்தான் குழந்தை பிறந்த உடனிருந்து 18 மாதம் வரை தடுப்பூசிகள் போட்டுவிட்டோம்.
    அப்படி என்றால் இப்பொழுது பள்ளிகூடத்தில் போடப்படும் ஊசி! என்ன ஊசி!! ஏன் போடப்படுகிறது???

    ReplyDelete
  2. மக்களின் நம்பிக்கை இந்த அளவிற்கு செல்ல காரணம் என்ன...

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.