.

Pages

Thursday, September 26, 2019

அண்ணா பல்கலைகழக உறுப்பு பொறியியல் கல்லூரியில் ரத்த தான முகாம்!

அதிராம்பட்டினம், செப்.26
பட்டுக்கோட்டை மனோரா ரோட்டரி சங்கம், ராஜாமடம் அண்ணா பல்கலைகழக உறுப்பு பொறியியல் கல்லூரி, பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை, தாமரங்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவை இணைந்து நடத்திய ரத்ததான முகாம், அண்ணா பல்கலைகழக உறுப்பு பொறியியல் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது. 

நிகழ்ச்சிக்கு, மனோரா ரோட்டரி சங்கத் தலைவர் என்.என் நடராஜன் தலைமை வகித்தார். கல்லூரி புல முதல்வர் ஜி. இளங்கோவன் முன்னிலை வகித்தார். ரோட்டரி சங்க மண்டலச் செயலாளர் ஆர்.அண்ணாதுரை வரவேற்றார். 

கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் வி. ராஜப்பா, பேராசிரியர்கள் கார்த்திகேயன், தமிழரசன், செந்தில்நாதன், ஈழத்தரசன்  . மனோரா ரோட்டரி சங்க உறுப்பினர்கள் எம்.எஸ். செல்வராஜ், மகேந்திரன், ஏ.கே குமார், ஏ.என் கண்ணன், ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

நிகழ்ச்சியில் அரசு மருத்துவர் டாக்டர் திவ்யா ரத்த தானம் செய்வதின் சிறப்பு , அவசியத்தை பற்றி விளக்கினார். சுமார் 60 மாணவ, மாணவிகள் ரத்த தானம் செய்தனர். முடிவில், மனோரா ரோட்டரி சங்கச் செயலாளர் சிவ. சரவணன் நன்றி கூறினார்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.