அமெரிக்கா வாழ் அதிரையர்களின் நலன் கருதி கடந்த 2012 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அமைப்பு அமெரிக்கா அதிரையர் கூட்டமைப்பு (AAF). இந்த அமைப்பின் மூலம் பல்வேறு சமூக நலப்பணிகள் மேற்கொள்ளபட்டு வருகின்றன.
இந்நிலையில், அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களை AAF அமைப்பின் சார்பில், அதன் நிர்வாகிகள் ஷிப்லி, அப்துல் கபூர், மீயண்ணா சலீம் உள்ளிட்டோர் கலிபோர்னியா மாகாணம் சான் ஹொசே, ஃபேர்மோன்ட் ஹோட்டலில் சந்தித்து 7 அம்ச கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர்.
மனுவில், தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதி பொதுமக்களின் நலன் கருதி, அதிராம்பட்டினத்தில் 110/11 KVA துணை மின் நிலையம் அமைக்கவும், அதிராம்பட்டினம் குடிநீர் தேவையை போக்க பம்பிங் (இறைவை) நீர் திட்டத்தை உடனடியாக செயல்படுத்தவும், அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் 24 மணி நேர சேவையை தொடங்கவும், அதிராம்பட்டினத்தில் தமிழக அரசின் 108 ஆம்புலன்ஸ் சேவை, அதிராம்பட்டினத்தில் பாதாள சாக்கடைத் திட்டம், அதிராம்பட்டினத்தில் தீயணைப்பு நிலையம், அதிராம்பட்டினத்தை புதிய தாலுகாவாக தரம் உயர்த்தி அறிவிப்பது உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகள் இடம்பெற்றுள்ளன.
தமிழக முதல்வரிடம் AAF அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது;
நமது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து நமது ஊர் மேம்பாட்டுக்குக்காக கோரிக்கை மனு கொடுத்தமைக்கு எனது மனம் மார்ந்த நன்றியை AAF நிர்வாகிகளுக்கு தெரிவுத்துக்கொள்ளுகிறேன்.
ReplyDeleteமேலும் இந்த கோரிக்கைகள் நிறைவேற்ற தொடர்ந்து follow-up செய்திட வேண்டுகிறன்.
நன்றி - இங்கனம்.
SM. ஷேக் (துபாய்)