.

Pages

Tuesday, September 17, 2019

அதிராம்பட்டினம் அருகே பழமை வாய்ந்த சிலை கண்டெடுப்பு!

அதிராம்பட்டினம், செப்.17
அதிராம்பட்டினம் அருகே உள்ள வள்ளிக்கொல்லைகாடு கிராமத்தில்  பழமை வாய்ந்த நடராஜர் சிலை ஒன்று இன்று செவ்வாய்க்கிழமை கண்டெடுக்கப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அடுத்துள்ள வள்ளிக்கொல்லைகாடு கிராமத்தை சேர்ந்தவர் முருகானந்தம். இவர், ஒரத்தநாட்டில் பொதுப்பணித்துறை உதவி பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர், தனக்கு சொந்தமான இடத்தில் புதிதாக வீடு கட்டி வருகிறார். இவரது வீட்டின் பின்புறத்தில் கழிவு நீர் தொட்டி கட்டுவதற்காக குழி தோண்டும் பணியில்  ஊழியர்கள் ஈடுபட்டபோது 5 அடி ஆழத்தில் மிகவும் பழமை வாய்ந்த 5 அடி உயரம் கொண்ட சுமார் 300 கிலோ எடை கொண்ட நடராஜர் சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த வருவாய்த்துறை அதிகாரிகள், காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கண்டெடுக்கப்பட்ட சிலை எந்த நூற்றாண்டை சேர்ந்தது என்பது தொல்லியல்துறை ஆய்வுக்குப் பின்னரே தெரியவரும் என்று அலுவலர்கள் தெரிவித்தனர். தகவலறிந்து ஏராளமானோர் வந்து கண்டெடுக்கப்பட்ட சுவாமி சிலையை வழிபட்டு சென்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.