தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் பிரதம மந்திரியின் கௌரவ நிதி திட்டத்தில் விவசாயிகள் தானாகவே இணைந்து கொள்ள வசதி பிரதம மந்திரியின் கௌரவ நிதி திட்டம் மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தில் சேர தகுதியுள்ள விவசாயிகள் சேர்க்கப்பட்டு தற்சமயம் பயன் பெற்று வருகின்றனர். இத்திட்டத்தின் கீழ் தகுதியுள்ள விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2000/- வீதம் ஒரு வருடத்திற்கு ரூ.6000/- அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தில் சேர தகுதியுள்ள விவசாயிகள், சேர்க்கப்படாமல் விடுபட்டு இருந்தால் அவர்கள் தங்களது ஆதார் ஆவணங்கள், வங்கி கணக்கு குறித்த ஆவணங்கள் மற்றும் நில உடமை ஆவணங்களுடன் அருகில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்களுக்கு சென்று ஆன்லைனில் உடன் பதிவு செய்து கொள்ளலாம்.
விவசாயிகள் தானாகவே www.pmkisan.gov.in என்ற இணையதளத்தில் Farmers corner option ல் சென்று,
1) ஆதார் விவரங்களை சரி பார்த்து திருத்தம் செய்து கொள்ளலாம்
2) இத்திட்டத்தில் சேராத தகுதியுள்ள விவசாயிகள் New Enrolment option ல் சென்று சேர்ந்து கொள்ளலாம்.
3) இந்நிதி திட்டத்தில் ஏற்கனவே இணைந்த விவசாயிகள் தங்களது விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
இத்திட்டத்தின் கீழ் 3-வது தவணை நிதியானது ஆதார் விவரங்கள் சரியாக இருப்பவர்களுக்கு மட்டும் விடுவிக்கப்படும். ஆதார் அட்டை மற்றும் வங்கி கணக்கு புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுளள பெயர் விவரங்கள் பொருந்தி இருக்க வேண்டும். எனவே முதல் இரண்டு தவணை நிதி பெற்றவர்கள் 3வது தவணை வரவு வைக்கப்படாமல் இருந்தால் தங்கள் ஆதார் விவரங்களையும் இணையதளத்தில் சரி பார்த்துக் திருத்தம் செய்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு தஞ்சாவூர் வேளாண்மை இணை இயக்குநர் அ.ஜஸ்டின் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.