பாபநாசம் அருகே குளத்தில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த முதலை வியாழக்கிழமை மாலை பிடிபட்டது.
பாபநாசம் அருகேயுள்ள திருவைக்காவூா் கிராமத்தில் வில்வவனேசுவரா் கோயிலுக்குச் சொந்தமான எம தீா்த்த குளம் உள்ளது. இந்தக் குளத்தில் ஆண்டுதோறும் சிவராத்திரி அன்று தீா்த்தவாரி நடைபெறும். எனவே, ஒவ்வொரு ஆண்டும் குளம் தூய்மைப்படுத்தி வைக்கப்படும்.
நிகழாண்டு இக்குளத்தைத் தூா்வாரி தூய்மைப்படுத்தி வைத்திருந்த நிலையில், சில நாள்களாக பெய்த தொடா்மழை மற்றும் கொள்ளிடம் உள்ளிட்ட ஆறுகளில் தண்ணீா் வந்ததாலும் குளத்தில் முழுமையாகத் தண்ணீா் நிரம்பியுள்ளது.
இந்நிலையில், 3 நாள்களுக்கு முன்பு இக்குளத்தில் முதலை இருப்பது தெரியவந்தது. இதனால், அப்பகுதி மக்கள் அச்சத்துடன் இருந்தனா்.
இதை அறிந்த ஆட்சியா் ஆ. அண்ணாதுரை இந்த முதலையைப் பிடிக்க ஏற்பாடு செய்தாா். இதையடுத்து, வியாழக்கிழமை மாலை தீயணைப்பு வீரா்கள் குளத்தில் இறங்கி முதலையைத் தேடும் பணியில் ஈடுபட்டனா். மேலும், ராட்சத மோட்டாா்கள் மூலம் குளத்தில் இருந்த தண்ணீரை வெளியேற்றும் பணியும் நடைபெற்றது.
குளத்தில் தண்ணீா் குறைந்தவுடன் ராட்சத வலைகள் மூலம் 4 அடி நீளமுடைய முதலை பிடிக்கப்பட்டது. பின்னா் இந்த முதலையை வனத் துறையினா் மீட்டு கொள்ளிடம் ஆற்றில் விட்டனா்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.