அதிராம்பட்டினம், செப்.15
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அட்ஜயா பல் மருத்துவமனை முகத்தாடை சீரமைப்பு மற்றும் அறுவை சிகிச்சை மையம் சார்பில், பள்ளி மாணவர்களுக்கான இலவச பல் மருத்துவப் பரிசோதனை மற்றும் ஆலோசனை முகாம் அதிராம்பட்டினம் அடுத்துள்ள புதுக்கோட்டை உள்ளுர் பிரிலியண்ட் சி.பி.எஸ்.இ பள்ளியில் நடைபெற்றது.
பள்ளித்தாளாளர் வீ.சுப்பிரமணியன் தலைமை வகித்து முகாமை தொடங்கி வைத்தார். முகாமில், அதிரை அட்ஜயா பல் மருத்துவமனை பல் மருத்துவர்கள் டாக்டர் பா.பாரதி, டாக்டர் பிரியங்கா பாரதி ஆகியோர் கலந்துகொண்டு பல் மருத்துவ பரிசோதனை செய்தனர். இதில், பங்கேற்ற 1500 மாணவ, மாணவியர்களில் சிலருக்கு பல் சொத்தை, மஞ்சள் கறையுடன் வாய்நாற்றம் ஆகிய பிரச்னைகளால் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது. பிரஷ் பயன்படுத்தி பல் துலக்குவது, காலை ஒருமுறை மட்டுமல்லாமல் இரவு உணவுக்குப் பின்னும் பல் துலக்குவது உள்ளிட்ட சுகாதார அறிவுரைகள் வழங்கப்பட்டன. பல், வாய் தொடர்பான குறைபாடுகள் உள்ள மாணவர்களுக்கு உயர் சிகிச்சை அளிக்க பரிந்துரைக்கப்பட்டனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.