.

Pages

Saturday, September 14, 2019

அதிராம்பட்டினம் புஹாரி ஷரீப் மஜ்லீஸ் நிறைவு விழா (படங்கள்)

அதிராம்பட்டினம், செப்.14
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் கடந்த 83 ஆண்டுகளாக ஓதப்பட்டு வரும் புஹாரி ஷரீப் மஜ்லீஸ், கடந்த ஆக.2 ந் தேதி ஜாவியா மஜ்லீஸ் வளாகத்தில் தொடங்கி, இன்று (செப்.14) சனிக்கிழமை காலை நிறைவடைந்தது.

அதிராம்பட்டினம் அல் மதரசத்துர் ரஹ்மானியா அரபிக் கல்லூரி முதல்வர் மவ்லவி கே.டி முஹம்மது குட்டி தலைமையில், 40 நாட்கள் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், இஸ்லாமிய மார்க்க அறிஞர்களின் சிறப்பு சொற்பொழிவு, துஆ, திக்ரூ நடைபெற்றது. இதில், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதியை சேர்ந்த பெண்கள் உட்பட 1000 த்திற்கு மேற்பட்ட இஸ்லாமியர்கள் பங்கேற்று வந்தனர். தினமும் மஜ்லீஸ் முடிவில் அனைவருக்கும் 'தப்ரூக்' உணவு வழங்கப்பட்டது.

இந்நிலையில், இதன் நிறைவு நாள் நிகழ்ச்சி இன்று (செப்.14) சனிக்கிழமை காலை நடைபெற்றது. இதில், அதிராம்பட்டினம், அல் மதரசத்துர் ரஹ்மானியா அரபிக் கல்லூரி முதல்வர் மவ்லவி கே.டி முகமது குட்டி தலைமை வகித்து, இஸ்லாமிய மார்க்க விளக்க சொற்பொழிவு ஆற்றினார். முடிவில் சிறப்பு துஆ ஓதப்பட்டன. இந்நிகழ்ச்சியில் பெண்கள் உட்பட 2000 த்துக்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியின் தொடக்கமாக, இன்று சனிக்கிழமை அதிகாலை சுபுஹு தொழுகைக்கு பின் திக்ரூ மஜ்லீஸ் நடைபெற்றது. இதில், இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள், தொழுகையாளிகள் பலர் கலந்துகொண்டு திக்ரூ செய்தனர்.

நிகழ்ச்சி ஏற்பாட்டினை, அதிராம்பட்டினம் அஜ்ஜாவியத்தூஸ் ஷாதுலியா நிர்வாகக் கமிட்டியினர் எம்.பி அபூபக்கர், டி.ஏ சேக் அலி உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.

மஜ்லீஸ் துளிகள்:
1. மஜ்லிஸில் அதிராம்பட்டினம், அல் மதரசத்துர் ரஹ்மானியா அரபிக் கல்லூரி முதல்வர் மவ்லவி கே.டி முஹம்மது குட்டி, பேராசிரியர்கள் மவ்லவி நெய்னா, மவ்லவி தேங்கை சர்புதீன் உள்ளிட்ட மார்க்க அறிஞர்கள் சொற்பொழிவு ஆற்றினார்கள். இதில், நல்லொழுக்கம், இறை நம்பிக்கை, ரசூல் (ஸல்) முஹ்பத், சமூக நல்லிணக்கம், ஆரோக்கியம், நீண்ட ஆயுள், இயற்கை பேரிடர் மற்றும் நோயிலிருந்து பாதுகாப்பு, மழை வேண்டி உள்ளிட்டவை குறித்து இடம்பெற்றது.

2. தொடர்ந்து தினமும் 40 நாட்கள் நடைபெற்று வந்த மஜ்லீஸ் நிகழ்ச்சியில் சராசரியாக பெண்கள் உட்பட 1000 பேர் வரை கலந்துகொண்டு சிறப்பித்து வந்தனர். குறிப்பாக விடுமுறை தினங்களில் கூட்டம் அதிகமாகக் காணப்படும்.

3. பெண்களுக்கும், சிறுவர்களுக்கும் ஜாவியா நிர்வாககத்தின் சார்பில் தனித்தனி இடவசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பெண்கள் அனைவரும் கடந்த வருடத்தை போல் அருகில் உள்ள காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமர வைக்கப்பட்டனர்.

4. அதிராம்பட்டினம் அஜ்ஜாவியத்தூஸ் ஷாதுலியா நிர்வாக கமிட்டி சார்பில் 6 ஆயிரம் உணவு பொட்டலங்கள் தயாரிக்கப்பட்டு, நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பெண்கள், சிறுவர்கள் உட்பட அனைவருக்கும்  வழங்கப்பட்டன.

5. கடந்த வருடங்களைப் போல் இந்த வருடமும் உணவு பொட்டலங்களில் பயன்படுத்தப்படும் ப்ளாஸ்டிக் பைகளை நிர்வாகக் கமிட்டியினர் தவிர்த்துக்கொண்டனர்.

6. உணவு பொட்டலங்கள் பேக்கிங் மற்றும் விநியோகம், ஹதியா நிதி வசூல் உள்ளிட்ட பணிகளில் உள்ளூர் தன்னார்வலர்கள் 100 பேர் ஆர்வத்துடன் ஈடுபட்டனர்.
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.