அதிராம்பட்டினம், செப்.23
அதிராம்பட்டினம் பேரூராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்து வரும் நாய் தொல்லையை கட்டுப்படுத்தக் கோரி எஸ்டிபிஐ கட்சியினர், அதிராம்பட்டினம் பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் கே.அன்பரசனிடம் இன்று திங்கட்கிழமை காலை மனு அளித்தனர்.
அதிராம்பட்டினம் பேரூர் பகுதியில் அதிகளவில் சுற்றித்திரியும் நாய்களால் குழந்தைகள் பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாகி வருகின்றனர். மேலும், போக்குவரத்துக்கு பெரும் இடையூறாகவும் இருந்து வருகிறது. எனவே, நாய்களை கட்டுப்படுத்த பேரூர் நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென மனுவில் கூறப்பட்டு இருந்தது. மனுவை பெற்றுக்கொண்ட துப்புரவு ஆய்வாளர் கே.அன்பரசன், இதுதொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக அவர்களிடம் தெரிவித்தாராம்.
அப்போது, அக்கட்சியின் அதிராம்பட்டினம் பேரூர் செயலாளர் சாகுல் ஹமீது, துணைத்தலைவர் யூ.அப்துர் ரஹ்மான், எஸ்டிடியூ மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஸ்லம், சமூக ஆர்வலர் ஹாலிக் மற்றும் அக்கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.