பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை தலைமையில் நடைபெற்றது. தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் முதல் குழந்தை இயேசு கோயில் வரை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை இன்று (28.09.2019) கொடியசைத்து துவக்கி வைத்தார்.
முன்னதாக, நெகிழி ஒழிப்பு மற்றும் மழைநீர் சேகரிப்பு தொடர்பான விழிப்புணர்வு உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் அனைவரும் எடுத்துக்கொண்டனர்.
பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கிவைத்து மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:-
மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தூய்மையே சேவை இயக்கம் சார்பில் 11.09.2019 முதல் 24.10.2019 வரை பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இத்திட்டத்தின் கீழ் அனைத்து பகுதிகளிலும் ஒரு முறை உபயோகப்படுத்தும் நெகிழி சேகரம் செய்யப்பட்டு, காந்தியடிகளின் பிறந்த நாளான அக்டோபர் 2 முதல் மத்திய அரசால் பிளாஸ்டிக் பொருட்கள் முழுமையாக தடை செய்யப்படவுள்ளது. சேகரம் செய்யப்படும் நெகிழிகளில் மறுசுழற்சி செய்யக்கூடியவற்றை தார்சாலை அமைத்தல் போன்ற பணிகளுக்கும், மறுசுழற்சி செய்ய முடியாதவற்றை டம்பிங் முறையில் புதைத்திடவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ராஜ்குமார், சுகாதார ஊக்குனர்கள், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் என சுமார் 600 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பேரணி புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கி ஆர்.ஆர்.நகர் வழியாக குழந்தை இயேசு கோயில் மைதானத்தில் நிறைவடைந்தது.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.