.

Pages

Saturday, August 31, 2013

குடிநீர் சீராக வழங்கக் கோரி அதிரை பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள் !

நமதூர் கடல் கரைத்தெரு,ஹாஜா நகர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளுக்கு கடந்த 5 நாட்களாக குடிநீர் சீராக வழங்கப்படுவதில்லை எனக் கோரி அப்பகுதியில் வசிக்கும் ஏராளமான பெண்கள் மற்றும் பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகத்தில் இன்று முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.

தகவல் அறிந்த அதிரை காவல் துறைக் கண்காணிப்பாளர் செங்கமலக்கண்ணன் அவர்கள் நேரில் வந்து பார்வையிட்டு முற்றுக்கையிட்டோரிடமும் பேரூராட்சி ஊழியர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்தப் பேச்சுவார்த்தையின்படி இன்று முதல் மாலை 5 மணிக்கு கடல் கரைத்தெரு அதன் உட்பட்ட பகுதிக்கும், காலை 7 மணிக்கு ஹாஜா நகர் அதன் உட்பட்ட பகுதிக்கும் குடிநீர் வழங்கப்படுமென்பதாக வாக்குறுதி அளித்ததன் பேரில் முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது.

இந்த முற்றுகை போராட்டத்தால் இந்தப் பகுதி சிறிது நேரம் பரபரப்புடன் காணப்பட்டது.

மரண அறிவிப்பு ! [மர்ஹூம் தியாகி S.S. இப்ராஹீம் அவர்களின் மகன் ]



கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் தியாகி சி.சு. முஹம்மது இப்ராஹீம் அவர்களின் மகனாரும்  மர்ஹூம் பரோஸ்கான்  என்கிற ஹல்லாஜி,அப்துல் ஹமீது,அன்சாரி,அப்துல் கபூர் ஆகியோரின் சகோதரரும்   சேட் என்கிற S.அகமது இப்ராஹீம் அவர்களின் தகப்பனாரும் சி.மு.முகம்மது நூர்தீன்,J.ரியாஸ்கான் ஆகியோரின் மாமனாருமாகிய I.சுலைமான்   அவர்கள் இன்று [ 31-08-2013 ] காலை மேலத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா  இன்று மாலை 4.30 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம்  செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

Friday, August 30, 2013

பிலால் நகர் பள்ளியில் நடைபெற்ற மற்றுமொரு எளிய திருமணம் !

அதிரை பிலால் நகர் பள்ளியில் இன்று [ 30.8.2013 ] மாலை 4.30 மணியளவில் இந்திய தௌஹீத் ஜமாத் அதிரை நகரத் தலைவர் கமாலுதீன் அவர்கள் இல்லத்திருமணம் எளிய முறையில் நடைபெற்றது. இதில் மார்க்க பிராச்சாரகர் அப்துல் ஹமீது அவர்கள் எளிய திருமணம் குறித்து சிறப்பு ச்சொர்ப்பொழிவு நிகழ்த்தினார்.   வரவேற்ப்புரை மற்றும் எளிய திருமணம் நடத்திடும் முறைபற்றி அதிரை தாரூத் தௌஹீத் செயலாளர் ஜமீல் M.சாலிஹ் சிற்றுரை நிகழ்த்தினார். ஜமாத்தார்கள் முன்னிலையில் இனிதே இந்நிகழ்ச்சி நடைபெற்றது.. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
 




மரண அறிவிப்பு ! [ கோமண்டை அஹமது ஜலாலுதீன் அவர்களின் மனைவி ]

 
பெரிய நெசவு தெருவைச் சார்ந்த மர்ஹூம் கோமண்டை அஹமது ஜலாலுதீன் அவர்களின் மனைவியும், காதிர் முகைதீன், அஜ்மல்கான், ஹபீபுல்லாஹ் ஆகியோரின் தாயாருமான ஜெய்புனிஷா அவர்கள்  இன்று   [ 30-08-2013 ] காலை  வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று [ 30-08-2013 ]  மாலை 5 மணியளவில் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

மரண அறிவிப்பு ! [ ரெஜினா ஸ்டோர் நூர்தீன் அவர்கள் ]

 
புதுக்குடி நெசவு தெருவைச் சார்ந்த மர்ஹூம் சேக் நூர்தீன் அவர்களின் பேரனும்,மர்ஹூம் முகம்மது யூசுப் அவர்களின் மகனாரும், அக்பர் அலி அவர்களின் சகோதரரும்,முகம்மது அஸ்லம்,அபுல் ஹசன் ஆகியோரின் தகப்பனாரும் முஜாஹிதீன் அவர்களின் மாமனாரும்,முகம்மது அலி,நெய்னா முகம்மது ஹாஜா,நெய்னா முகம்மது, அப்துல் முத்தலீஃப், அப்துல் முனாப்,முகம்மது காசீம் நூர் முகம்மது ஆகியோரின் மச்சானுமாகிய  ரெஜினா ஸ்டோர் உரிமையாளர் நூர்தீன் ஜவஹர் அவர்கள் இன்று [30/08/2013]காலை M.S.M. நகர் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று [30/08/2013] இஷாஹ் தொழுகைக்கு பின் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.. 

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

மரண அறிவிப்பு ! [புதுமனைத் தெரு]


புதுமனைத் தெருவைச் சார்ந்த மர்ஹூம்  மு..வா. செ. முஹம்மது சம்சுதீன் அவர்களின் மகளும், மர்ஹூம் மு.அ செ.முஹம்மது ஹசன் அவர்களின் மனைவியும் மர்ஹூம் மு.அ.முஹம்மது இப்ராஹீம், மர்ஹூம் மு.அ.முஹம்மது அஸ்ரஃப், மு.அ.சம்சுதீன் ஆகியோரின் தாயாருமாகிய   , ஜுலைகா அம்மாள் அவர்கள் இன்று  [29/08/2013]இரவு வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா நாளை [ 30-08-2013 ] காலை 8.30 மணியளவில் மரைக்கபள்ளி  மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

Thursday, August 29, 2013

மரண அறிவிப்பு !

கீழத்தெருவைச் சார்ந்த கோட்டூரார் விறகுகடை மர்ஹூம் கமாலுதீன் அவர்களின் மனைவியும், ஜாகிர் ஹுசைன், ஹாஜா, ஹாஜா முகைதீன் ஆகியோரின் தாயாரும் , அஹ்லன் டெய்லர் சர்புதீன் அவர்களின் மாமியாருமாகிய ஜெய்தூன் பீவி அவர்கள் நேற்று [ 28-08-2013 ]இரவு வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று [ 29-08-2013 ] காலை 9 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம். 

நள்ளிரவில் பெய்த மழையால் குளுமையாக காட்சியளிக்கும் அதிரை [ புகைப்படங்கள் ] !

அதிரையில் நேற்று நள்ளிரவு 11 மணியளவில் கனமழை பெய்தது. கடந்த சில நாட்களாகவே கடும் வெப்பதால் தவித்து வந்த அதிரை மக்களுக்கு இந்த மழை மகிழ்ச்சியை கொடுத்துள்ளன. குளு குளுவென மேகமூட்டத்துடன் காட்சியளிக்கும் அதிரையில் மேலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.







Wednesday, August 28, 2013

மரண அறிவிப்பு [ சபுரன் ஜெமீலா அவர்களின் பெரிய தகப்பனார் ] !

புதுத்தெருவைச் சார்ந்த மர்ஹூம் அ.மு. அப்துல் காசிம் அவர்களின் மகனும், மர்ஹூம் அப்துல் கறீம், அ.மு. அப்துல் ரெஜாக், அப்துல் சமது ஆகியோரின் சகோதரரும், அ.மு. ஜெய்லானி, அ.மு. நூரானி ஆகியோரின் தகப்பனாரும், கேப்டன் ஜூனைத், பரக்கத் அலி, ஹாஜா முகைதீன் ஆகியோரின் மாமனாரும், அஜ்மல்கான், ஜபருல்லாஹ்கான், நெய்னாகான், அஹமது அனஸ், லியாகத் அலி, ஹாஜா செரிப் ஆகியோரின் பெரிய தகப்பனாரும், நிசாத், சேக், டிக்காக்கான், காத்திப்கான், ஆசிப்கான், யாசிம், நாதிம் ஆகியோரின் அப்பாவும், பேரூராட்சியின் 10 வது வார்டு  உறுப்பினர் சபுரன் ஜெமீலா அவர்களின் பெரிய தகப்பனாருமாகிய  அ.மு. அப்துல் அஜீஸ் அவர்கள் இன்று [ 28-08-2013 ]காலை 8 மணியளவில் ஹாஜா நகர் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 5 மணியளவில் கடற்கரைத் தெரு ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

அமீரகம் ஃபுஜேராவில் உள்ள சுமார் 560 வருட பழமையான மண் பள்ளி ![ புகைப்படங்கள் ]





இந்த மண் பள்ளி வாசல் ஃபுஜேராவில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் குர்ஃபகான் கடல் கரை அருகில் உள்ள அல் பிதாயா எனும் ஊரில் ஒரு மலை அடிவாரத்தில் அமைதி சூழ அமைந்துள்ளது.

சுமார் 50 சதுர அடியே ஆனா நிலப்பரப்பில் நான்கு கோபுரங்களை ஒரே தூணில் தாங்கி நின்றபடி அழகிய பழமைத் தோற்றத்தில் காண்போரை கவரும் வண்ணம் அமையப் பெற்று இருப்பதே இதன் தனிச்சிறப்பு.

இப்பள்ளி வெறும் களிமண்ணாலும் மலைக்கற்க்களைக் கொண்டும் கட்டப்பட்டு இருக்கிறது.

ஐவேளைத் தொழுகை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் இப்பள்ளியில் தற்போது பங்களாதேசை சேர்ந்த ஹாஃபிஸ் அஹமது என்பவர் இமாமாக உள்ளார்.

இப்பள்ளியை பல தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் வந்து ஆராய்ந்தும் இப்பள்ளி கட்டிய சரியான வருடத்தை இதுவரை கண்டு பிடிக்க முடிய வில்லை.ஆராய்ச்சியாளர்களின் தகவலின்படி இந்த மண்பள்ளி 1446 ஆம் ஆண்டில் கட்டியிருக்கலாம் என்பதாக சொல்லப்படுகிறது.
  
பல தலைமுறையாய் இருந்து வரும் இப்பள்ளியை கட்டியது யார் என்று சரிவரத்தெரியாத புரியாத புதிராக உள்ளது என்று அங்கு வசிக்கும் மக்கள் கூறுகின்றனர்.

அமீரகத்தில் வசிப்போர்கள் அவசியம் ஒரு முறையேனும்  பார்க்கவேண்டிய இந்த மண்பள்ளி துபையிலிருந்து சுமார் 125 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.















 

அதிரையில் நடைபெற இருக்கும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள தி.மு.க அழைப்பு !

எதிர் வரும் [ 05-09-2013 ] அன்று காலை 10.30 மணியளவில் அதிரையில் நடைபெற இருக்கும் மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள நகர தி.மு. கழகம் சார்பில் பொதுமக்களுக்கு அழைப்பு  விடப்பட்டுள்ளது.

Tuesday, August 27, 2013

அதிரை காவல்துறையின் அன்பான அழைப்பை ஏற்று அனைத்து மஹல்லா நிர்வாகிகள் பங்கேற்பு !

அதிரை காவல்துறையின் அன்பான அழைப்பை ஏற்று இன்று [ 27-08-2013 ] மாலை 6 மணியளவில் நமதூர் காவல் நிலையத்தில் நடைபெற்ற மத நல்லிணக்க கூட்டத்தில் அதிரை அனைத்து மஹல்லாவைச் சார்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

பட்டுக்கோட்டை காவல்துறை ஆய்வாளர் செங்கமலக்கண்ணன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்தக்கூட்டத்தில் எதிர்வரும் 12-09-2013 அன்று நடைபெற உள்ள ‘விநாயகர் சதுர்த்தி’ ஊர்வலத்தில் எவ்வித அசம்பாவிதங்ளும் நடைபெறாமல் இருக்கும் பொருட்டு அனைத்து மஹல்லாவைச் சார்ந்த நிர்வாகிகள் தங்களுடைய ஒத்துழைப்பை நல்கவேண்டும் என்று அனைவரிடமும் அன்புடன் கேட்டுக்கொள்ளப்பட்டன.

இந்தக்கூட்டத்தில் அதிரை அனைத்து மஹல்லாவைச் சார்ந்த நிர்வாகிகள், பள்ளிவாசல்களின் நிர்வாக கமிட்டியினர், தமிழக தவ்ஹீத் ஜமாத்தின் கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். கலந்துகொண்ட அனைவரையும் அதிரை காவல்துறையினர் அன்புடன் வரவேற்று உபசரித்தனர்.


எம்.ஜி.ஆரின் 'தாலுகா கனவு' அதிரையில் நனவாகுமா !?

தாலுகா அலுவலகம் அமைய தகுதியுள்ள ஊரா அதிரை !?
ஏன் இல்லை ? வரலாற்றுகளில் முக்கிய பங்கு வகிக்கும் கடைமடைப் பகுதியான அதிரை பண்டைய கால வணிக வியாபாரத்தில் சிறந்து விளங்கின. பெரும்பாலான வணிகர்கள் தங்களுடைய வியாபாரமாக தேங்காய், மீன், நண்டு, கருவாடு, இறால் போன்ற விவசாயப் பொருட்களை ஏற்றுமதி செய்து வந்தனர் - வருகின்றனர். அதுமட்டுமா ! தமிழகத்தில் உப்பு அதிகமாக உற்பத்தி செய்யக் கூடிய ஊர்களில் அதிரையும் ஒன்று என்பது கூடுதல் சிறப்பாகவே இருந்து வருகிறது.

இவ்வூரில் கஸ்டம்ஸ் அலுவலகம், வானொலி நிலையம், துறைமுகம், நூலகம், தமிழக அளவில் புகழ் பெற்ற கல்லூரி, தொழிற்பயிற்சிக் கூடங்கள், மேல்நிலைப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், தொடக்கப்பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள், இரயில் நிலையம், தபால் நிலையம், காவல் நிலையம், வானிலை ஆராய்ச்சி நிலையம், கடலோரப் காவல் படை அலுவலகம், எரிபொருள் விற்பனை நிலையங்கள், சார்பதிவாளர் அலுவலகம், துணை மின் நிலையம், அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகள், மத்திய வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள், வழிபாட்டுத் தளங்கள் உள்ளிட்டவை அடங்கும். மேலும் இப்பகுதியை சுற்றி மகிழங்கோட்டை, தொக்காளிக்காடு, ராஜாமடம், புதுப்பட்டினம், மல்லிபட்டினம், ஆண்டிக்காடு, கொள்ளுக்காடு, மருதங்க வயல், கூடலிவயல், ஏரிபுறக்கரை, கீழத்தோட்டம், பழஞ்சூர், மளவேனிக்காடு, ராசியங்காடு, முடிச்சிக்காடு, மஞ்சவயல், நடுவிக்காடு, விலாரிக்காடு, உள்ளூர் புதுக்கோட்டை உட்பட்ட கிராமங்களில் சுமார் மூன்று லட்சம் வரை மக்கள் தொகையை கொண்ட பரந்த பகுதியாக விரிந்து காணப்படுகின்றன.

இவ்வளவு சிறப்புகளைப் பெற்ற பகுதியில் ‘தாலுகா அலுவலகம்’ இல்லாதது பெறும் குறையாக இருக்கின்றது. அதிரையில் வசிக்கும் ஒருவர் தாங்கள் வசிக்கும் இருப்பிடத்திலிருந்து தாலுகா அலுவலகம் செல்ல வேண்டும் என்றால் குறைந்தது ஒரு ஆட்டோ அல்லது இரண்டு பஸ்கள் மாறி சுமார் 20 கி.மீ., தூரம் வரை பயணம் செய்ய வேண்டியுள்ளது. அதிரைக்கே இந்த கதி என்றால் அதிரையின் பகுதியை சுற்றியிருக்கும் கிராமங்களில் வசிக்கக் கூடியவர்களின் நிலை எவ்வாறு இருக்கும் !?

ஜாதி [ !? ], வருமானம், இருப்பிடம் உள்ளிட்ட சான்றுகள் பெறவும், பட்டா மாறுதல், ரேஷன் கார்டு தொடர்பான குறைகளுக்கும், நலத்திட்ட உதவிகள் பெறவும், நிலத்தை அளவீடு செய்வதற்கும் நீண்ட தூரத்தில் அமைந்துள்ள தாலுகா அலுவலகத்திற்கு செல்ல வேண்டியதோடு மட்டுமல்லாமல் அங்கே மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டு விடுகிறது.

தாலுகா அலுவலக வாசலில் டோக்கன் பெறுவதற்காக காத்திருந்து வரிசையில் நிற்க வேண்டும். அந்த டோக்கனில் குறிப்பிடப்படும் நாட்களில்தான் அங்கே நாம் செல்ல வேண்டும். அதன்படி செல்கின்ற அன்றைய தினமும் நாள் முழுக்க காத்திருந்த பிறகே சான்று பெற முடியும்.

நீண்ட தூரத்தை கருத்தில் கொண்டு வேலை செல்லும் பொதுமக்களும், வயோதியர்களும், கல்லூரி, பள்ளிகளுக்குச் செல்லும் மாணவ மாணவிகளும் சான்று பெறுவதற்காக தாங்கள் பணி புரிகின்ற நிறுவனங்கள் மற்றும் பள்ளிகளிலிருந்து விடுமுறை எடுத்துக்கொண்டே தாலுகா அலுவலகத்துக்குச் செல்கின்றனர். இந்த பணிக்காக சிலர் இடைத்தரகர்களிடம் தங்களின் பணத்தை இழப்பதும் அவ்வப்போது உண்டு.

இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண, அதிரையை தலைமையிடமாகக் கொண்டு புதிய தாலுகா அமைக்க வேண்டும். இதற்காக அதிரையில் கடந்த 1981 ஆம் ஆண்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக மேலத்தெருவில் புதிதாக கட்டப்பட்டிருந்த நீர் தேக்க தொட்டியிணை திறந்து வைப்பதற்காக காலஞ்சென்ற முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்கள் அதிரை மாநகருக்கு வருகை புரிந்தார். அப்போது எம்ஜிஆர் அவர்கள் தனது சொற்பொழிவின் இடையே, விரைவில் அதிரையை தலைமையிடமாகக் கொண்டு புதிய தாலுகாவாக மாற்றப்படும் என்று ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்த மாபெரும் கூட்டத்தில் பகிரங்கமாகவே அறிவித்தார். அன்றைய கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்களும் தங்களின் நீண்ட நாள் கோரிக்கையான தாலுகா அலுவலகம் விரைவில் நம் பகுதியில் வர இருக்கின்றதை எண்ணி மகிழ்ந்ததோடு மட்டுமல்லாமல் நீண்ட கரஒலியை எழுப்பி அவருக்கு நன்றியும் தெரிவித்தனர்.

அறிவிப்பு செய்து 32 ஆண்டுகள் கடந்துவிட்டன...
எண்ணற்ற அரசியல் மாற்றங்கள்,
புதிய கட்சிகள்,
புதிய இயக்கங்கள்,
சமூக அமைப்புகள்,
தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்

என உருவாகி இருந்தாலும் அதிரை அதிரையாகவே இருக்கின்றன அதன் வளர்ச்சிப் பாதையில் பின்தங்கியே [ மெய்யாலுமே பஸ்டாண்டு இல்லிங்க :) ] காணப்படுகின்றன.

எம்.ஜி.ஆர் அவர்களின் 'தாலுகா கனவு' அதிரையில் நனவாகுமா !?

சேக்கனா M. நிஜாம்
இறைவன் நாடினால் தொடரும்...

மரண அறிவிப்பு !

மேலத்தெருவைச் சார்ந்த மர்ஹூம் மஸ்தான் கனி அவர்களின் மகனும், மர்ஹூம் K.S.M. அப்துல் வஹாப், மர்ஹூம்  K.S.M. சேக்தாவூது,  K.S.M. பகுருதீன்,  K.S.M. புஹாரி ஆகியோரின் மருமகனும், S.M. ரபி முஹம்மது, S.M. முத்து  மரைக்கான், S.M. ஜலாலுதீன் ஆகியோரின் சகோதரரும், இப்ராஹிம்சா, ஜாபர் அலி ஆகியோரின் மைத்துனரும், ஜெஹபர் சாதிக் அவர்களின் தகப்பனாருமாகிய நாகூர் பிச்சை என்கிற அஹமது அனஸ் அவர்கள் நள்ளிரவில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று [ 27-08-2013 ] காலை 10 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

Monday, August 26, 2013

அதிரை ஈசிஆர் சாலையிலுள்ள மதுபானக்கடைகளை அகற்றக்கோரி TMJK கட்சியினர் ஆர்ப்பாட்டம் !

தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சியின் சார்பாக மாபெரும் ஆர்ப்பாட்டம் இன்று [ 26-08-2013 ] மாலை 5 மணியளவில் அதிரை பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது.

ஈசிஆர் சாலையோரத்தில் உள்ள மதுபானக் கடைகளை அப்புறப்படுத்தக்கோரியும், அதிரைப்பகுதியில் அடிக்கடி நிகழும் வாகன விபத்துகளை தடுக்கும் நோக்கில் சாலைகளின் பிராதானப் பகுதியில் வேகத்தடை ஏற்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் AJ. ஜியாவுதீன், தலைமை கழக செயலாளர் A.K.N ஷாஜஹான், மாநில பொருளாளர் N.S.M. நஜ்முதீன் ஆகியரோடு சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட அதிரை அன்வர் மற்றும் அதிரை பேரூராட்சித் தலைவர் அஸ்லம் ஆகியோர் மதுவின் தீமை குறித்து சிற்றுரை நிகழ்த்தினார்கள்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.






அதிரையில் இருவேறு இடங்களில் நடைபெற்ற வாகன விபத்தில் இருவர் பலத்த காயம் !

அதிரை கடற்கரைத் தெருவை சார்ந்தவர் ஜஹாங்கீர் வயது [ 36 ]. சவூதி அரேபியாவில் பணிபுரிந்துவரும் இவர் தனது விடுமுறையை கழிப்பதற்காக சொந்த ஊருக்கு வந்துள்ளார். இன்று காலை ஈசிஆர் சாலையில் தனது இரு சக்கர வாகனத்தில் முத்துப்பேட்டைக்கு செல்லும் போது பெட்ரோல் பங்க் அருகே எதிரே வந்த மினி வேன் மோதியதில் பலத்த காயமடைந்தார்.

அவ்வழியே சென்றவர்கள் ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்ததை அடுத்து பலத்த காயமடைந்த ஜஹாங்கீரை சிகிச்சைக்காக தஞ்சை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். வாகனத்தை ஒட்டிச்சென்றவரும் அதிரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தகவலறிந்த அதிரை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர். இதனால் இந்தப்பகுதி முழுதும் பரப்பரப்பாக காணப்பட்டது.

அதேபோல் இன்று காலையில் மற்றொரு விபத்து அதிரை ஈசிஆர் சாலையில் முத்தம்மாள் தெரு ஆர்ச் அருகில் நடந்தன. அச்சாலையில் எதிர் எதிரே வந்த இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் கடற்கரைத்தெருவை சார்ந்த ஹுசைன் அவர்களின் மகன் வயது [ 17 ] பலத்த காயங்களுடன் தஞ்சை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மற்றொரு வாகனத்தில் வந்த ஏரிபுறக்கரையைச் சேர்ந்த சதிஸ் மற்றும் பாலமுருகன் ஆகியோர் அதிரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தகவலறிந்த அதிரை காவல்துறையினர் விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.




தஞ்சைலிருந்து செல்லக்கூடிய இரயில்களின் கால அட்டவணை !

#
No
Train Name
Arr.Time
Schedule
1
14260
17:00
S
M
T
W
T
F
S
2
16866
08:43
S
M
T
W
T
F
S
3
16865
18:23
S
M
T
W
T
F
S
4
12084
11:43
S
M
T
W
T
F
S
5
12083
15:43
S
M
T
W
T
F
S
6
14259
04:58
S
M
T
W
T
F
S
7
16232
04:48
S
M
T
W
T
F
S
8
16231
19:13
S
M
T
W
T
F
S
9
16177
06:15
S
M
T
W
T
F
S
10
16178
20:25
S
M
T
W
T
F
S
11
16179
04:35
S
M
T
W
T
F
S
12
16180
22:35
S
M
T
W
T
F
S
13
16701
03:38
S
M
T
W
T
F
S
14
16702
23:25
S
M
T
W
T
F
S
15
16735
22:15
S
M
T
W
T
F
S
16
16736
04:18
S
M
T
W
T
F
S
17
16779
23:28
S
M
T
W
T
F
S
18
16780
22:53
S
M
T
W
T
F
S
19
16853
14:43
S
M
T
W
T
F
S
20
16854
10:18
S
M
T
W
T
F
S
21
17315
09:28
S
M
T
W
T
F
S
22
17316
01:53
S
M
T
W
T
F
S
23
18495
14:30
S
M
T
W
T
F
S
24
18496
16:13
S
M
T
W
T
F
S
25
22623
04:53
S
M
T
W
T
F
S
26
22624
00:43
S
M
T
W
T
F
S
27
16615
21:13
S
M
T
W
T
F
S
28
16616
06:13
S
M
T
W
T
F
S

For Enquiry & Reservation : ( 04362 ) 239131, 230131