அதிரை ஆலடித்தெருவில் அமைந்துள்ள முகைதீன் ஜும்மாப் பள்ளியில் வழக்கம்போல் இந்த வருடமும் ரமலான் மாதம் முழுவதும் நோன்பு கஞ்சி விநியோகமும் மற்றும் இஃப்தார் நிகழ்ச்சியும் சிறப்பாக நடந்து வருகின்றன.
நாள் ஒன்றுக்கு 30 கிலோ அரிசியில் தயாரிக்கப்படும் நோன்பு கஞ்சியை இப்பகுதியை சுற்றியுள்ள பொதுமக்கள், சிறுவர் சிறுமிகள் ஆகியோர் ஆர்வமாக வந்து வாங்கிச் செல்கின்றனர்.
இதற்காக பள்ளியின் நிர்வாகம் சார்பாக குழுவினர் நியமித்து தினமும் அஸர் தொழுகைக்குப்பின் நோன்பு கஞ்சி விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
அதிரை சிட்னி ஃபிரண்ட்ஸ் கிரிக்கெட் அணியினர் சார்பாக இன்று மாலை நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சியில் 500 க்கும் மேற்பட்ட அதிரையர் பெரும் திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
புகைப்படங்கள் : முஹம்மது [ எஸ்டிபிஐ ]
Mashaalla
ReplyDeleteMashaalla
ReplyDeleteமாஷா அல்லாஹ்...சிறிய வயதில் பெரும் முயற்சி செய்து நன்மைகளை அல்லாஹ்விடத்தில் அபகரிக்கும் இந்த செயல் வரவேக்கதக்கது.
ReplyDeleteஇப்பெரும் கூட்டங்களில் எவரேனும் இப்தார் நேரத்தில் பிரார்த்தனையில் ஈடுபட்டார்களா என்றால் மிக அரிது ஒரு சிலரே ஈடுபட்டார்களே தவிர மற்றவர்கள் வீண் பேச்சிகளில் ஈடுபாடுக்கொண்டனர்.
“நோன்பாளி நோன்பு திறக்கும் நேரத்தில் கேட்கும் துஆ மறுக்கப்படமாட்டாது” (இப்னுமாஜா)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ” மூன்று துஆக்கள் ஏற்றுக் கொள்ளப்படும்.
நோன்பாளியின் துஆ, அநீதியிழைக்கப்பட்டவனின் துஆ, பயணியின் துஆ” -(பைஹகி)
அல்லாஹ்வின் இல்லத்தில் வீண் பேச்சுகளை தவிர்த்து திக்ர் மற்றும் துஆவுடன் இருக்க வேண்டும்...ஏக இறைவன் நம் குறைகள் அனைத்தையும் மன்னித்தருள்வானாக..ஆமீன்
ஏற்பாட்டாளர்களுக்கு நன்றி கலந்த வாழ்த்துக்கள்
ஜசக்கல்லாஹ் ஹைர்