.

Pages

Monday, August 19, 2013

அதிரையில் கட்டிமுடித்தும் திறக்கப்படாமல் இருக்கிற சுகாதார வளாகங்கள் !

திரை தேர்வு நிலை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதி மேலத்தெரு. இந்த பகுதியில் திறந்த வெளியில் மலம் கழிப்பதை முழுமையாக தவிர்க்கும் பொருட்டு நபார்டு திட்டத்தின் கீழ் 2008-2009 ஆம் ஆண்டிற்கான நிதி ரூபாய் 6 லட்சம் ஒதுக்கீட்டில் பெண்கள் பயன்படுத்தும் வகையில் நவீன வசதியில் சுகாதார வளாகம் கட்டி முடிக்கப்பட்டது.
அதே போல் மற்றுமொரு சுகாதார வளாகம் காட்டுப்பள்ளி தெருவில் கடந்த 2011-2012 ஆம் ஆண்டிற்கான நிதி ரூபாய் 9 லட்சம் ஒதுக்கீட்டில் ஆண் - பெண் இருபாலரும் பயன்படுத்தும் வகையில் நவீன வசதியில் சுகாதார வளாகம் கட்டி முடிக்கப்பட்டது.
இந்த வளாகங்கள் கட்டி முடிக்கப்பட்டு சில ஆண்டுகள் ஆகியும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படாமல் இருப்பது இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.

இந்த சுகாதார வளாகத்தை அதிரை பேரூராட்சி நிர்வாகம் விரைந்து திறப்பதற்குரிய முயற்சியில் ஈடுபட வேண்டும் என்பது பெரும்பாலான மக்களின் கோரிக்கையாக இருக்கின்றது.

பேரூராட்சி மன்ற நிர்வாகம் கவனத்தில் கொள்ளுமா !?

6 comments:

  1. பதிவுக்கு நன்றி.

    தகவலுக்கும் நன்றி.

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  2. கட்டிமுடித்து நீண்ட நாட்களாகியும் இந்த சுகாதாரவாளகத்தை திறக்காததன் காரணம் என்ன ..? என்பதை அந்த தெரு வார்டு மெம்பர்கள் தான் விபரத்தை அறிந்து விரைவில் திறக்க ஏற்ப்பாடு செய்ய வேண்டும்.

    ReplyDelete
  3. காட்டுப்பள்ளியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள சுகதார வளாகத்திற்க்கு இன்னும் மின்சார வசதி செய்யப்படவில்லை,மின் இணைப்பு பேருராட்சின் அதிகாரியின் பெயரில் தான் பெற் முடியும், அவ்வாறு இணைப்பை பெறுவதற்கு கீழத்தெரு முஹல்லாவின் கடிதம் தேவை படுகிறது, முஹல்லா கடிதம் கொடுக்க தாமதம் செய்வதால்., சுகாதார வளாகம் திறப்பத்ற்கும் தாமதம் ஏற்பட்டுள்ளது..

    ReplyDelete
  4. Kattu palli street reason ok then What happened to west street toilet room ?

    ReplyDelete
  5. Kattu palli street reason ok then What happened to west street toilet room ?

    ReplyDelete
  6. கீழத்தெரு வளாகத்தில் உள்ள சுகாதார மையம் விரைவில் திறக்கப்படும் என்று தெரு மெம்பர் லத்திபு சொன்னார்......

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.