எந்த நாட்டிற்கு நம் அதிரைச்சகோதரர்கள் குடிபெயர்ந்து போனாலும் நமது பாராம்பரிய உணவுவகைகளை மறப்பதில்லை. அந்தவகையில் சொல்லப்போனால் துபையை முதலிடமாகச் சொல்லலாம். அதிலும் சமையல் செய்வதில் நாங்கள் ஒன்றும் சளைத்தவர்கள் இல்லை என்று நிரூபிக்கும் வகையில் அவரவர்களின் இல்லங்களில் பெருநாளின் காலை
ஸ்பெஷல் உணவு வகைகளான வட்டலப்பம், கடல்பாசி,சேமியாகஞ்சி, மட்டன் குருமா, பரோட்டா இடியாப்பம் என அதிரை மணத்துடன் கூடிய அறுசுவை உணவுடன் காலை உணவினை சாப்பிட்டு மகிழ்ந்து பெருநாளை இனிதே கொண்டாடினர்.
செய்தி தொகுப்பு & புகைப்படங்கள் துபையிலிருந்து அதிரை மெய்சா
அனைவருக்கும் எனது இனிய பெருநாள் நல் வாழ்த்துக்கள்.
ReplyDelete