அதிரையில் பெருநாளை ஓட்டி ஆடு, கோழி இறைச்சி யின் விலை உயர்ந்துள்ளது.
அதிரையில் முக்கிய பகுதிகளில் ஆங்காங்கே ஆடு கோழி இறைச்சிக்கடைகளில் விற்பனையாகும் இறைச்சியை அதிரையர் உணவுக்காக வாங்கிச்செல்வார்கள். குறிப்பாக வெள்ளிக்கிழமைகளில் இறைச்சியின் விற்பனை படுஜோராகக் காணப்படும்.
புனித ரமலான் மாதத்தின் முதல் தினத்திலிருந்து பெரும்பாலான கடைகளில் விலைகளை கணிசமான அளவு குறைத்து விற்பனை செய்தனர். இதற்காக ஒலிப்பெருக்கின் மூலம் நகரெங்கும் அறிவிப்புகளும் போட்டி போட்டுக்கொண்டு செய்தனர்.
இன்னும் சில தினங்களில் ரமலான் முடிவுற்று பெருநாளை கொண்டாட உள்ள நிலையில் இறைச்சி விற்பனைக்காக ஆடு, கோழி, வான்கோழி போன்றவற்றின் வரத்து நகரில் அதிகமாக காணப்படுகின்றன. நேற்றைய தினத்தில் கணிசமாக விலையை குறைத்து விற்கப்பட்ட இறைச்சிகள் இன்று முதல் கணிசமாக விலை உயர்ந்துள்ளது.
ரமலான் மாத முதல் நாளிலிருந்து ஒரு கிலோ ஆடு இறைச்சியின் விலை ரூபாய் 340 முதல் 360 வரையும், ஒரு கிலோ பிராய்லர் கோழி இறைச்சியின் விலை ரூபாய் 150 முதல் 160 வரையும் விற்கப்பட்டவை, இன்று முதல் ஆடு இறைச்சி ரூபாய் 400/- என்றும், ஒரு கிலோ பிராய்லர் கோழி இறைச்சி 200/- என்றும் விற்கப்படுகின்றன. மேலும் சராசரியாக முக்கால் கிலோ எடையுள்ள நாட்டுக்கோழி ஒன்றின் விலை ரூபாய் 225 முதல் 250 வரையும், ஒரு கிலோ வான்கோழியின் விலை ரூபாய் 200/- என்றும் விற்கப்படுகின்றன.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.