முன்னதாக அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பின் தலைவரும், மேலத்தெரு தாஜூல் இஸ்லாம் சங்கத் தலைவருமாகிய M.M.S. சேக் நசுருதீன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்த, அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பின் செயலாளர் பேராசிரியர் M.A. முஹம்மது அப்துல் காதர் அவர்கள் 'புனித ரமலான் மாதத்தின் சிறப்புகள்' குறித்து சிற்றுரை நிகழ்த்தினார். இறுதியில் கவிஞர் தாஹா அவர்களின் துஆவுடன் நோன்பு திறக்கப்பட்டது.
சிறப்பு அழைப்பின் பேரில் நிகழ்ச்சிக்கு வருகை தந்த அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பின் நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவரையும் பெரிய ஜும்மா பள்ளி இஃப்தார் கமிட்டியின் சார்பாக அதன் நிர்வாகிகள் M.M.S. சேக் நசுருதீன், P.M.K. தாஜுதீன், மா. செ. ஜபருல்லாஹ், B. ஜமாலுதீன், N.M. சம்சுல் மன்சூர் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும் அன்புடன் வரவேற்று உபசரித்தனர்.
இன்றைய இஃப்தார் நிகழ்ச்சியில் 600 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மகிழ்ச்சியான செய்தி...
ReplyDeleteஆனால் இப்தார் நேரங்களில் அதிகமதிகம் இறைவனிடத்தில் கெஞ்சி பிரார்த்தியுங்கள் என்று இஸ்லாம் சொல்ல மைக்கை பிடித்து சமுதாயத்தின் தனது சேவையையும் நிறை,குறைகளையும் வர்ணிக்கும் நேரமா இது? இதை இப்தார் நேரத்தில்தானா செய்வது முன்பே ஆரம்பித்து பின்பு இப்தார் நேரத்தில் பிரர்த்திக்கலாமே...சமுதாய சிந்தனைவாதிகளே மறுமையையும் சிந்தித்து செயல்படுவீர்!
“நோன்பாளி நோன்பு திறக்கும் நேரத்தில் கேட்கும் துஆ மறுக்கப்படமாட்டாது” (இப்னுமாஜா)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ” மூன்று துஆக்கள் ஏற்றுக் கொள்ளப்படும்.
நோன்பாளியின் துஆ, அநீதியிழைக்கப்பட்டவனின் துஆ, பயணியின் துஆ” -(பைஹகி)