.

Pages

Friday, August 9, 2013

முத்துப்பேட்டையில் இருதரப்பு மோதல் ! போலீஸ் தடியடி !

முத்துப்பேட்டையில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் கலவரத்தில் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டு, தடியடி நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
முத்துப்பேட்டையில் வெள்ளிக்கிழமை ரமலான் சிறப்பு தொழுகை நடந்தது. அதே போல பா.ஜ.க இளைஞரணி மாநில பொருப்பாளர் கருப்பு என்கிற முருகானந்தம் பிறந்த நாளையொட்டி அவரது ஆதரவாளர்கள் ஊர்வலமாக கோஷம் போட்டுக் கொண்டே சென்றனர். இதைப் பார்த்த இஸ்லாமிய இளைஞர்கள் ரமலான் ஊர்வலம் என்று கூறிக் கொண்டு மோட்டார் சைக்கிள்களில் ஊர்வலம் சென்றனர். இதனால் இரு தரப்பிற்கும் இடையே பிரச்சணை வரும் சூழ்நிலை உருவானது.

2 முறைக்கு மேல் ஊர்வலம் செல்லும் போது கடை வீதியில் வெடி வெடிக்கச் சென்ற போது, வெடி வெடிக்க கூடாது என்று போலீசார் தடுத்தனர். இதனால ஒரு தரப்பு இளைஞர்களுக்கும் போலீசாருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தள்ளுமுள்ளு அதிகமானதால், போலீசார் தடியடி நடத்தினார்கள். இதனால் முத்துப்பேட்டை பகுதி பரபரப்பாக உள்ளது.

நன்றி : நக்கீரன்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.