அவ்வழியே சென்றவர்கள் ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்ததை அடுத்து பலத்த காயமடைந்த ஜஹாங்கீரை சிகிச்சைக்காக தஞ்சை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். வாகனத்தை ஒட்டிச்சென்றவரும் அதிரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தகவலறிந்த அதிரை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர். இதனால் இந்தப்பகுதி முழுதும் பரப்பரப்பாக காணப்பட்டது.
அதேபோல் இன்று காலையில் மற்றொரு விபத்து அதிரை ஈசிஆர் சாலையில் முத்தம்மாள் தெரு ஆர்ச் அருகில் நடந்தன. அச்சாலையில் எதிர் எதிரே வந்த இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் கடற்கரைத்தெருவை சார்ந்த ஹுசைன் அவர்களின் மகன் வயது [ 17 ] பலத்த காயங்களுடன் தஞ்சை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மற்றொரு வாகனத்தில் வந்த ஏரிபுறக்கரையைச் சேர்ந்த சதிஸ் மற்றும் பாலமுருகன் ஆகியோர் அதிரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தகவலறிந்த அதிரை காவல்துறையினர் விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.
எனது நண்பன் ஜஹாங்கிர் வாகன விபத்தில் படுகாயம் அடைந்தது எனக்கு ரொம்ப அதிர்ச்சியாக உள்ளது . ரொம்ப அமைதியாக தான் அவன் வாகனத்தில் செல்வான். அவனுக்கு இப்படி நேர்ந்தது என்னால் நம்ப முடிய வில்லை. அவன் பூரண குணமடைய அல்லாஹ் விடம் துஆ செய்கிறேன் . அமீன் .
ReplyDeleteமுஹமது இக்பால் குவைத்
விபத்தில் பாதிப்படைந்த சகோதரர்கள் அனைவரும் பூரண குணமடைய இறைவனிடம் கையேந்துகிறேன். ஆமீன்
ReplyDeleteகடற்கரைத்தெருவில் விரைவில் கூட்டப்பட உள்ள அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பின் கூட்டத்தில் நமதூரில் அடிக்கடி நிகழ்ககூடிய விபத்துகள் குறித்தும், நமது அரசு மருத்துவமணையில் போதிய வசதியின்மையால் குறிப்பாக முதலுதவி மற்றும் உபகரணங்கள் இல்லாததால் குறிப்பிட்ட தஞ்சை மருத்துவமனைக்கு வாடிக்கையாக அழைத்து அல்லது அனுப்பட்டு வருவது குறித்தும் தகுந்த நடவடிக்கை எடுப்பது தொடர்பாக விவாதிக்க கேட்டுக்கொள்ளப்படும்.[ இன்ஷா அல்லாஹ் ]
ReplyDeleteசகோ.நிஜாம் அவர்களின் கருத்து ஏற்கத்தக்கது அது மட்டுமின்றி ECR சாலைகளில் இரு பக்கமும் சாலையோர வெளிகள் அடைத்தால் பெரும் விபத்துகளிலிருந்து எளிதாக தப்பலாம்
ReplyDeleteகுறுகிய சாலைகள் இருபுரமும் வரும்/செல்லும் வழிகள் இருப்பதால் சாலை நடுவே வெள்ளைகோடுகள் அமைக்க வேண்டும் அதில் ஆபாய விளக்குகளை பொறுத்துவது விபத்துகளை தடுக்க எதுவாக இருக்கும்
மேலும் சேது வழி சாலை (ECR) மிக மிக முக்கியமான இடமென்பதால் சாலை விதிமுறைப் பலகைகளை ஆங்காங்கே நடுவது சிறந்தது அடிக்கடி விபத்துகள் ஏற்பட காரணம் இதுபோன்றொரு சாலை விதிமுறைப்பலகை சரியாக அமைக்கப்படவில்லை.
சமூக நல்லுள்ளம் படைத்தவர்கள் துரித நடவடிக்கை எடுத்து இதற்கான அலுவலரிடம் புகார் தெரிவித்து இன்ஷாஅல்லாஹ் வரக்கூடிய காலங்களில் எந்தொரு அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
அல்லாஹ் அனைவரையும் பாதுகாக்க வேண்டும்.
விபத்தில் பாதிப்படைந்த சகோதரர்கள் அனைவரும் பூரண குணமடைய இறைவனிடம் கையேந்துகிறேன். ஆமீன்
ReplyDelete