அதிரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக பெருநாள் திடல் தொழுகை E C R ரோடு பிலால் நகர் பெட்ரேல் பங்க் எதிரில் உள்ள கிராணி மைதானத்தில் இன்று காலை 7.40 மணிக்கு நடைபெற்றது. இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநில செயலாளர் அஷ்ரஃப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்களின் சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றன.
அதிரையில் வசிக்கும் அனைத்து பகுதியில் உள்ள பெரும்பாலான ஆண்கள், பெண்கள் பெரும்திரளாக தொழுகையில் கலந்துகொண்டு சிறப்பித்தனர். திடலில் பெண்களுக்காக தனியாக இடம் ஒதுக்கப்பட்டு இருந்தன. பெண்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
தொலைதூரத்திலிருந்து வந்த பெரும்பாலானோர் தங்களின் வாகனத்தை சாலையில் நிறுத்தி இருந்ததால் தொழுகை முடியும் வரை அப்பகுதி முழுவதும் நெருக்கடியாக காணப்பட்டது.
அதிரை ஈத் கமிட்டியால் தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் நடத்தி வருகின்ற பெருநாள் திடல் தொழுகையை வழக்கம் போல் இந்த வருடமும் மேலத்தெரு சானவயலில் இன்று காலை சிறப்பாக நடந்தது. இதில் முஹம்மது ஆலிம் அவர்களின் சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றன.
அதிரையில் வசிக்கும் அனைத்து பகுதியில் உள்ள பெரும்பாலான ஆண்கள், பெண்கள் பெரும்திரளாக தொழுகையில் கலந்துகொண்டு சிறப்பித்தனர். திடலில் பெண்களுக்காக தனியாக இடம் ஒதுக்கப்பட்டு இருந்தன.
. இனிய நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள்............
ReplyDeleteby adirai west yaseen
This comment has been removed by the author.
ReplyDeleteஅனைவருக்கும் எனது இனிய பெருநாள் நல் வாழ்த்துக்கள்.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஅனைவருக்கும் எனது இனிய பெருநாள் நல் வாழ்த்துக்கள்.
ReplyDelete