மாற்றுத்திறனாளிகள் பேச இயலாத - காது கேளாதோர் நல சங்கம் கடந்த சில ஆண்டுகளாக அதிரை கடைத்தெரு பகுதியில் திறம்பட இயங்கி வருகின்றன. இச்சங்கத்தில் பெண்கள் உட்பட ஏராளமானோர் உறுப்பினர்களாக இருந்து வருகின்றனர். இவர்கள் மாதமொருமுறை கூட்டத்தை கூட்டி தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்து விவாதிக்கின்றனர். சக உறுப்பினர்களின் இன்ப துன்பங்களில் பங்கெடுத்தும் கொள்கின்றனர். பிறருக்கு உதவிகள் பல செய்தும் வருகின்றனர்.
அதிரை நியூஸின் சார்பாக எத்தனையோ சாதனையாளர்களை நேர்காணலுக்காக நாங்கள் சந்தித்திருந்தாலும் அவர்களில் எங்களின் நெஞ்சை நெகிழச் செய்த அன்புச்சகோதரர்கள் இவர்கள் மட்டுமே என்றால் மிகையாகாது.
அதிரை நியூஸின் நேர்காணலுக்காக அவர்களின் நல சங்க அலுவலகத்தில் அருமையான தேநீர் பொழுதில் சந்தித்து உரையாடினோம். இதோ அதன் காணொளி...
தங்களின் குழந்தைகள் காது கேட்க வில்லையென்றாலும் பேசமுடியாமல் இருந்தாலும் அவர்களை கட்டாயம் காது கேளாதோர் பள்ளியில் ( சிறப்பு பள்ளி) மட்டுமே சேர்க்கப்படவேண்டும். ஒருங்கிணைந்த கல்வித்திட்டம் என்று சில விபரம் அறிந்த பெற்றோர்களே சாதாரண பள்ளியில் சேர்கின்றனர், பல பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு இல்லாததாலும், தங்களது குழந்தைகளின் குறைகளை வெளிப்படுத்த தயங்கியும் சாதாரண பள்ளியிலேயே சேர்க்கப்படுகின்றனர்.
சாதாரண பள்ளி ஆசிரியர்களால் இவர்களுக்கு பாடம் கற்ப்பித்து தருவது என்பது இயலாத காரியம், இவர்களுக்கு என்று சிறப்பு பள்ளி மற்றும் சிறப்பு ஆசிரியர்களால் மட்டுமே காதுகேளாத குழந்தைகளுக்கு பயிற்சிகள் கொடுக்கப்படமுடியும்,
இப்படிப்பட்ட மாற்றுதிரனாளிக்களின் நலனையும் அவர்களுக்கு சிறப்பு பயிற்சி கொடுக்கப்படவேண்டும் அவர்களின் திறன் மேன்படவேண்டும் என்பதற்காக மாநிலம் முழுவதும் அரசு சுமார் 30 பள்ளிகளுக்கும் மேல் நிறுவப்பட்டு உள்ளது. ஆனால் இப்படிப்பட்ட பள்ளிகளில் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை சேர்ப்பது இல்லை, மாற்றுத்திறனாளி மாணவர்களை சாதாரண பள்ளியில் சேர்ப்பதனால் அவர்களுக்குள் உள்ள பல திறமைகள் வெளிக்கொண்டு வர முடியாமல், அப்படிப்பட்ட குழந்தைகள் தனிமைப்படுத்தி விடக்கூடிய நிலை வந்து விடும். [ Thanks : Penmai ]
அதிரை நியூஸ் சாகுல் ஹமீது பேட்டி எடுத்துள்ள விதம் அருமை.
ReplyDeleteவாய் பேசாதோர் காது கேளாதவர்களையும் ஊக்கப்படுத்தி காணொளிப்பதிவும் எடுத்து வெளியிட்டிருக்கும் உங்களின் புது முயற்ச்சிக்கு பாராட்டுக்கள்.
ஆஹா! அதிரை நியூஸ் இப்போது பட்டி தொட்டி முதல் பிறக்கும் குழந்தை பற்றிய செய்தியையும்,பிறந்த பின் குழநதையின் கஷ்டமான நிலைமையையும் அருமையாக பேட்டி கண்டு அதிரை நியூஸ் நேயர்களுக்கு வழங்கிய பெருமை சேக்கன்னா நிஜாம்,மணிச்சுடர் நிருபர் ஷாகுல் ஹமீது இவர்களை சாரும்...
ReplyDeleteஇந்த வாய் பேசாத,காது கேளாத இவர்களை காணும் போது அல்லாஹ்வின் படைப்பை என்ன குறை சொல்ல முடியும்..
அருமையான பேட்டி.அதிரை நியூஸ் என்றால் அதிரை நியூஸ் என்பதில் ஐயமில்லை.
இவர்கள் நமது ஊரின் செல்ல பிள்ளைகள்....... மொத்தம் 41 ஆன்களும், 11 பெண்களும் உள்ளார்கள்..இவர்கல் அனைவரும் ஒன்றாக இனைந்து, செயல்படுகிரார்கள்|.....அல்லாஹ் இவர்களுக்கு நன்மை செய்வானாக............ இவர்கலுடைய பேட்டியை எததனை பேர்கள் புரிந்து கொண்டார்கள் என்பது தெரியவில்லை.... எந்த நிரந்தர வேலையும் இவர்களுக்கு இல்லை. நல்ல உள்ளம் கொண்டவர்கள் உதவி செய்ய முன்வர வேண்டும்
ReplyDelete