.

Pages

Monday, August 12, 2013

1973-ல் வியட்நாம் போரின் போது காட்டில் பதுங்கியவர்கள்! மொழி மறந்த பின் கண்டுபிடிப்பு !

வியட்நாம் போரின் போது காணாமல் போன 42 வயது தந்தையும் அவரது 1 வயது மகனும், 40 ஆண்டுகளின் பின் மத்திய வியட்நாம் காட்டில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர். இப்போது தந்தையின் வயது 82. மகனின் வயது 41.

1973ம் ஆண்டு வியட்நாம் போரின் போது இவர்களின் வீட்டில் வெடித்த குண்டால் இவரது மனைவியும் குடும்பத்தாரும் பலியாக, தன் 1 வயது மகனைத் தூக்கிக் கொண்டு இவர் காட்டினுள் ஓடியிருந்தார்..

காட்டினுள்ளே நீண்ட தூரம் பயணித்துச் சென்ற சிலர் இவர்களது மரவீட்டை கண்டு, அதிகாரிகளுக்கு அறிவித்த பின்னர் இவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

காட்டின் நடுவே சிறிய அளவு சோளம் வளர்த்தும் பழங்கள் மற்றும் வேர்களை உண்டும் இவர்கள் இவ்வளவு காலமும் உயிர்வாழ்ந்துள்ளனர்.

மரப்பட்டையால் ஆன உடையை அணிந்திருந்த மகனிற்கு வெளியுலகோடு தொடர்புகொள்ளும் அளவிற்கு எந்த மொழியும் தெரியவில்லை. ஓரிரு சொற்களே தெரிந்திருக்கிறது. தந்தையும் நீண்டகாலம் யாருடனும் பேசாது இருந்தமையால், பேசுவதை பெரிதளவு மறந்து விட்டார்.
thanks web dunia



3 comments:

  1. Adiraiyil nanbar nijamum ,shahulum kalakukiral endral , manga matruum enna endru Maisa kaka UAE -yil eruthu kalakuraha. Aha mootham AdiraiNews oru puthiya pari namam thoodarattum ungal pani.

    ReplyDelete
  2. enna sollureenga unmaya ithu appa enaku link kodunga

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.