.

Pages

Sunday, August 18, 2013

அதிரைக்கவிஞர் மு. முஹம்மது தாஹா அவர்களோடு ஒரு அழகிய சந்திப்பு [ காணொளி ] !

1. தங்களின் மார்க்கப்பணி மற்றும் எழுத்துப்பணியைப் பற்றி ?
2. தங்களுக்கு ஏற்பட்ட தமிழ்மொழி பற்றுதலைப்பற்றி கூறுக
3. கவிதை எழுதும் ஆர்வம் ஏற்பட்டது எப்படி ?
4. அதிரையில் வாழ்ந்த கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், அறிஞர்கள் ஆகியோரைப்பற்றி கூறுக.
5. உங்களைக் கவர்ந்த சக கவிஞர்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் இளங்கவிஞர்கள் ஆகியோர் யார் ?
6. உங்களின் பார்வையில் பட்ட அதிரையின் பெண் கவிஞர்கள் சிலரைப்பற்றி கூறுக

ஆகிய கேள்விகளை முன்வைத்து அதிரை நியூஸின் நேர்காணலுக்காக கவிஞர் மு. முஹம்மது தாஹா அவர்களின் இல்லத்தில் அருமையான தேநீர் பொழுதில் சந்தித்தோம்.

அதிரைக்கவிஞர் அல்ஹாஜ் மு. முஹம்மது தாஹா எம்.ஏ, பி.எட்., அவர்களைப் பற்றிய சிறுகுறிப்பு :
'அருட்கவி' என்று நண்பர்களால் பாரட்டப்படுகிற அதிரையின் மூத்தக்கவிகளில் ஒருவர் அதிரைக்கவிஞர் மு. முஹம்மது தாஹா எம்.ஏ, பி.எட்., அவர்கள். மார்க்கப்பணி, எழுத்துப்பணி ஆகியவற்றில் மூழ்கியிருப்பதோடு மட்டுமல்லாமல் நமதூருக்கு பெருமை சேர்க்கும் அளவு பல நூல்களை எழுதி வெளியுட்டுள்ளார். அதிரையில் அதிகளவில் நூல்களை எழுதியவர் என்ற பெருமை இவரைச்சாரும். இவர் எழுதிய மொத்த நூல்களின் எண்ணிக்கை 55 ஆகும்.

கவிதைச்செம்மல், தமிழ்மாமணி போன்ற விருதுகளையும் பெற்றுள்ளார். பல நூல்களுக்கு அணிந்துரைகளையும் வழங்கியுள்ளார் மேலும் இவரின் நூல்கள் பலருக்கு முனைவர் பட்டம் பெற உதவியாக இருந்துள்ளது என்பது கூடுதல் சிறப்பாக உள்ளது.

8 comments:

  1. அருட் கவிஞர் அதிரைக்கு கிடைத்த பாக்கியம்.
    அதிரை என்றால் நினைவுக்கு வருபவர்களில் இவர்களும் ஒருவர்.
    அதிரையின் புகழ்.

    ReplyDelete
  2. கவிஞர் தாஹவின் எழுத்தும் பேச்சும் இனிமையே.. இளைஞர் நெஞ்சில் வித்துக்கள்..
    பழுத்த ஞான பேசினார் பண்புரைகள் சொத்துக்கள்..
    அழுத்தமான உழைப்பினால் அகத்தில் முத்துவாகினார் கொழுத்த ஞான கவிஞர் தாஹா.

    இந்த அதிரை கவிஞரை பேட்டி கண்ட அதிரை நியூஸ் இளம் நண்பர்கள் அனைவருக்கும் என் உள்ளம் கனிந்த நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம்...
    நன்றி!

    ReplyDelete
  3. கவிஞர் தாஹா அவர்கள் பேட்டியில் தெரியாத பல விசயங்களை தெரிந்து கொள்ளும்படியாக அமைந்திருந்தது. பாராட்டப்பட வேண்டியவர்களில் ஒருவர். இனிமையானவர். அவர்களின் அமைதியான சேவைகள் பாராட்டப்பட வேண்டியவை. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. ஜஸாக்குமுல்லாஹ் கைரன் வ ஆஃபியா.

    ReplyDelete
  5. அன்பின் தம்பி, விழிப்புணர்வு வித்தகர் சேக்கனா நிஜாம,
    அஸ்ஸலாமுஅலைக்கும்,

    என்னை நீங்கள் “நேர்காணல் “ காண வேண்டும் என்று துடித்துக் கொண்டும் பேரவாவுடன் பேட்டிக்கு ஆயத்தமா என்று என்னிடம் கேட்டுக் கொண்டும் இருந்த பொழுதிலெல்லாம், தமியேன் சொல்வேன்,”என்னைவிட மிகச் சிறப்பானவர்கள் தமிழ் இலக்கியத்தில் சாதனைப் படைத்தவர்கள் நிரம்ப உளர்; அவரக்ளை எல்லாம் முதலில் பேட்டி கண்டு முடித்து வாருங்கள்; என்னுடைய கவிதைத் தொகுப்பு வெளி வராமல் யான் பேட்டி அளிப்பதும் தகுதியன்று; இன்னும் என்னை நானே “விளம்பரப்படுத்த்தல்” என்னும் அவப்பெயரை உண்டாக்கி விடும் என்றும் சொல்வேன்.

    இப்பொழுது என் பொறுமைக்கு அல்லாஹ் கொடுத்த அன்பளிப்பு தான், என் பேட்டி வருவதற்கு முன்னால், எனக்கெல்லாம் முன்பாக பல்லாண்டுகளாக சொல்லாட்சி புரியும் சுந்தரத் தமிழின் அருட்கவி அவர்களைப் பேட்டி காணவும்; அப்பேட்டியின் ஊடே அடியேனையும் அருட்கவியார் அவர்கள் அங்கீகரித்திருப்பதையும் காணும் பொழுது உணர்கிறேன்; இதுதான் நான் எதிர்பார்த்தது; நானாக என்னைச் சொல்லிக் கொள்வதை விட தகுதியும் திறமையும் புலமையும் மிக்கோர் வாயால் என்னை அங்கீகரித்தால் அதுவே என் ஆத்மதிருப்தியாகும்!

    நிற்க. என் வயதை விடச் சிறியவர்களாக இருந்தும் என் அன்புத்தங்கை - அதிரை வித்து- முத்துப்பேட்டை முத்து-கவியருவி மலிக்காஃபாரூக் அவர்களை இன்னும் பேட்டி எடுக்கவில்லையா? மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!
    இணையம் என்றால் என்ன? வலைப்பூ என்றால் என்ன? முகநூல என்றால் என்ன? இப்படி எதுவுமே தெரியாமல் “கிணற்றுத்தவளையாக” இருந்த என்னை, “காக்கா இப்படிச் சென்றால் இகமெங்கும் உங்கள் பெயரும், ஊரின் பெயரும் விளங்கப்பெறும்” என்று எனக்குத் திசைகள் காட்டிய வழிகாட்டி; அத்தங்கையிடம் உடன் பெறுங்கள் ஒரு பேட்டி!

    நீங்கள் இரசித்துக் கொண்டிருக்கும் இந்த இலண்டன் வானொலியின் தொடர்பையும் அங்கு வாசித்துக் கொண்டிருக்கும் அன்புத் தங்கை தேன்குரல் மங்கை ஷைஃபா மலிக் அவர்களையும் எனக்கு நேரடித் தொடர்பில் ஏற்படுத்திக் கொடுத்து விட்டு இன்று ஒதுங்கிக்கொண்டிருக்கு ஓர் ஒப்பற்ற கவிதாயினிதான் என் அன்பிற்குரிய தங்கை முத்துப்பேட்டை மலிக்கா ஃபாரூக் ஆவார்கள். இன்ஷா அல்லாஹ் இவ்வாரம் அவர்களின் பேட்டியை காண அவா.

    ReplyDelete
  6. அருட்கவிஞர் அதிரை தாஹா
    அழகுடன் தருவர் கவிதை
    இருட்டினை நீக்கும் அறிவு
    இவரின் கவிதையில் உண்டு
    உருட்டும் உங்கள் மனதில்
    உயர்வான இவரின் கவிதை
    ஏற்றிடும் உங்கள் மனதை
    ஏகன் இருக்கும் இடத்தில்
    ஒருங்கிடும் அலையும் எண்ணம்
    ஓத்திசைய இவரின் கவிதையில்.

    ReplyDelete
  7. அறிஞர் அருட்கவி முகம்மது தாஹா அவர்கள்
    ஒரு நடமாடும் இஸ்லாமிய இலக்கிய அருவி.

    அறிஞர் அருட்கவி முகம்மது தாஹா அவர்கள்
    இறைத்தேடலில் முத்துக்கள் கண்ட ஆன்மீகவாதி.

    அறிஞர் அருட்கவி முகம்மது தாஹா அவர்கள்
    பெண்கள் பெருமானார் வழிநடத்தும் முன்னோடி.

    அறிஞர் அருட்கவி முகம்மது தாஹா அவர்கள்
    அதிரை அன்னையின் இலக்கிய முகமூடி.

    அறிஞர் அருட்கவி முகம்மது தாஹா அவர்கள்
    பெருமானார் அறிவுகள் விதைக்கும் ஞானி.

    அறிஞர் அருட்கவி முகம்மது தாஹா அவர்கள்
    அனுதினமும் பெருமானார் அறிவருந்தும் தாகி.

    அறிஞர் அருட்கவி முகம்மது தாஹா அவர்கள்
    வலிமார்கள் வாசம்தேடும் இறையவன் யோகி.

    அறிஞர் அருட்கவி முகம்மது தாஹா அவர்கள்
    சிந்தனைகள் ஊற்றேடுக்கும் சீர்மிகு கவியருவி.

    அறிஞர் அருட்கவி முகம்மது தாஹா அவர்கள்
    தமிழ்பல்கலைகழகம் தேன் தேடிச்செல்லும் தேனீ.

    அறிஞர் அருட்கவி முகம்மது தாஹா அவர்கள்
    தமிழ்நாட்டின் விருதுகள் குமியும் கிடங்கி.

    அறிஞர் அருட்கவி முகம்மது தாஹா அவர்கள்
    ஆன்மீகவழி திக்ர் வழிநடத்தும் ஷாதுலி.

    அறிஞர் அருட்கவி முகம்மது தாஹா அவர்கள்
    'ஆஹா தாஹா'வென ஞனியார் கண்ட நல்மணி.

    ReplyDelete
  8. முன்பொரு நாள் தாஹா சார் பற்றி நான் எழுதியதை இங்கு பதிகிறேன்..

    உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை.
    ==============================

    (*) உத்தமத் திருநபியின்
    உயர்பெயரைத் தாங்கியவர்,
    சித்தத்தில் நல்லொழுக்கம்
    சீர்மையுடன் ஓங்கியவர்.
    மெத்தப் படித்திருந்தும்
    தற்பெருமை நீங்கியவர்,
    மொத்தமாய் தமிழ்ப்புலமை
    குத்தகைக்கு வாங்கியவர்.

    (*) பள்ளிக்கு தலைமையென்னும்
    பதவியிலே இருந்திட்டார்,
    முள்ளுக்குள் முளைத்திருக்கும்
    முழுரோஜா மலரொத்தார்.
    செல்லுக்கு உள்ளூடும்
    செந்தமிழைச் செலுத்திட்டார்.
    வில்லேவும் அம்பைப்போல்
    விகடங்கள் அளித்திட்டார்.

    (*) துள்ளிய ஒளிவீசும்
    தூய ஜிப்பா,
    மெல்லிய சிரிப்பின்வழி
    தெரியும் பற்கள்,
    உள்ளத்தின் நிறமதுவே..
    உரைத்தேன் கேளீர்,
    வெள்ளையின் விளக்கமென
    விளங்கும் தோற்றம்.

    (*) மானுடராய் வாழ்தல்மட்டும்
    மகிமை ஆகா.-ஒழுக்கம்
    பேணுதலாய் வாழுதலும்
    பாழாய்ப் போகா.-என்னும்
    வானுயரும் கோட்பாட்டில்
    வாழும் தாஹா (அவர்கள்)
    வாஞ்சையோடு வாழியவே..
    வாழி வாழி !!
    ===========================================================

    அன்புடன்,
    அதிரை என்.ஷஃபாத்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.