.

Pages

Monday, August 26, 2013

அதிரை ஈசிஆர் சாலையிலுள்ள மதுபானக்கடைகளை அகற்றக்கோரி TMJK கட்சியினர் ஆர்ப்பாட்டம் !

தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சியின் சார்பாக மாபெரும் ஆர்ப்பாட்டம் இன்று [ 26-08-2013 ] மாலை 5 மணியளவில் அதிரை பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது.

ஈசிஆர் சாலையோரத்தில் உள்ள மதுபானக் கடைகளை அப்புறப்படுத்தக்கோரியும், அதிரைப்பகுதியில் அடிக்கடி நிகழும் வாகன விபத்துகளை தடுக்கும் நோக்கில் சாலைகளின் பிராதானப் பகுதியில் வேகத்தடை ஏற்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் AJ. ஜியாவுதீன், தலைமை கழக செயலாளர் A.K.N ஷாஜஹான், மாநில பொருளாளர் N.S.M. நஜ்முதீன் ஆகியரோடு சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட அதிரை அன்வர் மற்றும் அதிரை பேரூராட்சித் தலைவர் அஸ்லம் ஆகியோர் மதுவின் தீமை குறித்து சிற்றுரை நிகழ்த்தினார்கள்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.






3 comments:

  1. நியாமான இரு கோரிக்கைகளை வலியுறுத்தி செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம் வெற்றிபெற வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. இரண்டு கோரிக்கைகளுமே முக்கியமானவை. இதனை ஆர்ப்பாட்டத்துடன் விட்டு விடாமல் செயல் படுத்தும் வரை முயற்ச்சிக்க வேண்டும்.

    ReplyDelete
  3. கூட்டம் நடந்தது எல்லாம் Okay..! புகைப்படத்தில் பெருந்தலைவர் ஐயா உமர் தம்பி காக்கா அவர்களை காணோமே..??

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.