.

Pages

Tuesday, August 20, 2013

அதிரையில் தி.மு.க நடத்தும் மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள அழைப்பு [ காணொளி ]

இன்று [ 20-08-2013 ] மாலை நகர தி.மு.க சார்பாக கட்சியின் அலுவலகத்தில் சிறப்புக் கூட்டம் கூட்டப்பட்டது. இக்கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் ஏனாதி பாலசுப்ரமணியம் அவர்கள் தலைமையிலும், அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம், நகர செயலாளர் இராம. குணசேகரன், மகிழங்கோட்டை ஊராட்சி துணைத்தலைவர் சுப்புமாறன், தொக்காளிக்காடு ஊராட்சித்தலைவர் மணிவாசகம், மளவேனிற்காடு ஊராட்சித்தலைவர் மல்லிகா மணியரசர் ஆகியோர் முன்னிலையிலும் துவங்கியது.

அதிரை பேரூந்து நிலையத்திலிருந்து பழைய போஸ்ட் ஆபிஸ் ரோடு, கடைத்தெரு, கீழத்தெரு, மேலத்தெரு வழியாக மகிழங்கோட்டை சாலை மற்றும் சி.எம்.பி லைனிலிருந்து நடுவிக்காடு, உள்ளூர் புதுக்கோட்டைக்குச் செல்லும் சாலை ஆகியவற்றை மறு சீரமைத்து தரவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மாபெரும் ஆர்ப்பாட்டம் தி.மு.க நகர கிளையின் சார்பாக அதிரை மற்றும் அதிரையைச் சுற்றியுள்ள கிராமத்தினர் ஒன்றிணைந்து எதிர் வரும் [ 05-09-2013 ] அன்று காலை 10.30 மணியளவில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்துள்ளனர்.

இக்கூட்டத்தில் தி.மு.க நகர நிர்வாகிகள், வார்டு உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

நடைபெற இருக்கிற ஆர்ப்பாட்டம் குறித்து அதிரை நியூஸ் சார்பாக ஒன்றிய செயலாளர் ஏனாதி பாலசுப்ரமணியம், அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம், நகர செயலாளர் இராம. குணசேகரன், தி.மு.கழக முன்னோடி அதிரை ஹலீம், 11 வது வார்டு உறுப்பினர் அன்சர்கான் ஆகியோரிடம் கருத்தைப்பெற்றோம்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.