.

Pages

Wednesday, August 28, 2013

அமீரகம் ஃபுஜேராவில் உள்ள சுமார் 560 வருட பழமையான மண் பள்ளி ![ புகைப்படங்கள் ]





இந்த மண் பள்ளி வாசல் ஃபுஜேராவில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் குர்ஃபகான் கடல் கரை அருகில் உள்ள அல் பிதாயா எனும் ஊரில் ஒரு மலை அடிவாரத்தில் அமைதி சூழ அமைந்துள்ளது.

சுமார் 50 சதுர அடியே ஆனா நிலப்பரப்பில் நான்கு கோபுரங்களை ஒரே தூணில் தாங்கி நின்றபடி அழகிய பழமைத் தோற்றத்தில் காண்போரை கவரும் வண்ணம் அமையப் பெற்று இருப்பதே இதன் தனிச்சிறப்பு.

இப்பள்ளி வெறும் களிமண்ணாலும் மலைக்கற்க்களைக் கொண்டும் கட்டப்பட்டு இருக்கிறது.

ஐவேளைத் தொழுகை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் இப்பள்ளியில் தற்போது பங்களாதேசை சேர்ந்த ஹாஃபிஸ் அஹமது என்பவர் இமாமாக உள்ளார்.

இப்பள்ளியை பல தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் வந்து ஆராய்ந்தும் இப்பள்ளி கட்டிய சரியான வருடத்தை இதுவரை கண்டு பிடிக்க முடிய வில்லை.ஆராய்ச்சியாளர்களின் தகவலின்படி இந்த மண்பள்ளி 1446 ஆம் ஆண்டில் கட்டியிருக்கலாம் என்பதாக சொல்லப்படுகிறது.
  
பல தலைமுறையாய் இருந்து வரும் இப்பள்ளியை கட்டியது யார் என்று சரிவரத்தெரியாத புரியாத புதிராக உள்ளது என்று அங்கு வசிக்கும் மக்கள் கூறுகின்றனர்.

அமீரகத்தில் வசிப்போர்கள் அவசியம் ஒரு முறையேனும்  பார்க்கவேண்டிய இந்த மண்பள்ளி துபையிலிருந்து சுமார் 125 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.















 

6 comments:

  1. அட எல்லார்மே நம்மாளுங்க :)

    ஆஹா அருமை... அருமை... நேரில் பார்த்தது போல் உள்ளது. அனைத்தும் தெரிந்துகொள்ள வேண்டிய புதிய தகவல்

    ReplyDelete
  2. //ஆராய்ச்சியாளர்களின் தகவலின்படி இந்த மண்பள்ளி சுமார் 1446 வருடத்திற்கு முன் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது,//---பிழையான கூற்று. அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்தே 1434 வருடங்கள் தான் ஆகின்றன. மேலும் அந்த பள்ளியில் வைக்கப்பட்டுள்ள குறிப்டேட்டின் படியும் அது கி.பி. 1446ம் ஆண்டில் பள்ளி கட்டப்பட்டிருக்ககூடும் என்று தான் சொல்கிறதே தவிர, பள்ளிக்கு வயது 1446 வருஷம் என்று சொல்லவில்லை.

    ReplyDelete
  3. சகோதரர் அகமது பிர்தௌஸ்.

    பதிவில் தவறை சுட்டிக்காண்பித்தமைக்கு மிக்க நன்றி.

    தாங்கள் சுட்டிக் காண்பித்த தவறு திருத்தப்பட்டு விட்டன.

    ReplyDelete
  4. நிறைய தடவை சென்றிருக்கோம், ஆனால் இப்படி ஒரு பதிவு போடனும் என்று தோன்றியதில்லை, அருமை மெய்சாக்கா

    ReplyDelete
  5. Dear Mr.Mysa,
    Thank you for your published our khuruppakan trip the ancient majeed and our pictures.
    sadik batcha deira travels dubai.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.